வியாழக்கிழமை, 12 டிசெம்பர் 2013,10:50am
அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் படி இலங்கையில் 51 சிறுவர்கள் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இவர்களில் பலருக்கு அவர்களின் அவர்களின் தாயிடமிருந்தே பரவியுள்ளது.
2010 ம் ஆண்டு பிறந்த 3 சிறுவர்களும் 2012ஆம் ஆண்டில் பிறந்த 6 சிறுவர்களும் இந்த வருடத்தின் செப்ரெம்பர் மாதம் வரை 12 சிறுவர்களுமாக இதுவரை 51 சிறுவர்கள் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் வைத்திய அதிகாரி வைத்தியர் சிசிர லியனகே தெரிவித்தார்.
மேலும் ஆண் குழந்தைகளை விட அதிகமாக பெண் குழந்தைகளே எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும் ஆனால் இதுவரை 14 சிறுவர்களே இதற்கான சிகிச்சையை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பில் 27 பேரும் கண்டியில் 7 பேரும் கம்பகா மற்றும் குருநாகல் மாவட்டத்தில் 5 பேரும் இதுவரை எயிட்ஸ் நோய் தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டுபிகக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





Time in Colombo
0 comments:
Post a Comment