செவ்வாய்க்கிழமை, 17 டிசெம்பர் 2013,3:12pm
இலங்கையில் மிக விரிவான பாதை வலையமைப்பொன்று இருந்தாலும் அவற்றில் பெரும்பாலானவைகள் இற்றைக்கு 50 வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்டவைகளாக இருக்கின்றன.
அதிகரிக்கும் வாகனங்களின் கொள்ளளவுக்கு வெற்றிகரமாக ஈடுகொடுக்கக்கூடிய நிலையில் அவை இல்லை.அதனால் வளர்ச்சியடைகின்ற போக்குவரத்துத் தேவைகளுக்கு முகங்கொடுப்பதற்கும் பாதை வலையமைப்பு நாட்டின் அபிவிருத்திக்கு இடையூறாக இருப்பதைத் தடுப்பதற்கும் விரிவானதும் வினைத்திறன் மிக்கதுமான பாதை வலையமைப்பொன்றை மேம்படுத்தவேண்டிய அவசியம் உணரப்பட்டது.
இதன் அடிப்படையிலேயே கட்டுநாயக்கா-கொழும்பு அதிவேகப்பாதையும் உருவாக்கப்பட்டது.இந்த வீதியின் நீளம் 25.8 கி.மீட்டர்களாகும். இது புதிய களனிப்பாலத்திற்கு அருகிலிருந்து ஆரம்பமாகுகின்றது. கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலைய வீதியில் இது முடிவடைகின்றது.
இதன் நிர்மாணம் சார்ந்த செலவு 350 மில்லியன் அ.மெரிக்க டொலர்களாகும். .ந்த அதிவேகப்பாதையூடாக மணித்தியாலத்திற்கு 100 கி.மீ வேகம் வரை வாகனங்கள் பயணிக்கலாம். இந்த வீதியைப் பயன்படுத்துவதால் கொழும்புக்கும் கட்டுநாயக்காவுக்கும் இடையில் போக்குவரத்துக்கு எடுக்கும் காலத்தை 20 நிமிடங்கள் வரை குறைக்க முடிந்துள்ளது.வெளிநாடுகளுக்குச் செல்வதற்கென விமான நிலையம் செல்லும் பலரும் இன்று நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.
இந்த அதிவேக வீதிக்கு 04 பிரதான இடைமாறல் நிலையங்கள் உண்டு.
1. புதிய களணிப் பாலத்திற்கு அருகிலுள்ள இடைமாறல் நிலையம்
2. பேலியகொட இடைமாறல் நிலையம்
3. ஜா-எல இடைமாறல் நிலையம்
4. கட்டுநாயக்கா இடைமாறல் நிலையம்
இதன் நிர்மாணம் சார்ந்த பணிகள் 2009-08-18 ஆரம்பிக்கப்பட்டன. நெடுஞ்சாலைகள்இ துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சினதும் வீதி அபிவிருத்தி அதிகார சபையினதும் கண்காணிப்பில் சீன நிர்மாணக் கம்பனியினால் வீதி நிர்மாணக் கருத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டில் கடல் மணலைப் பரவி நிர்மாணிக்கப்பட்ட ஒரேயொரு அதிவேக வீதி இந்த கொழும்பு – கட்டுநாயக்கா வீதி முக்கியத்துவம் வாய்ந்தது என நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறைக் கருத்திட்ட அமைச்சர் நிர்மல கொத்தலாவள தெரிவித்தார்.
அதே போன்று நவீனத் தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தி முறையான ஒரு போக்குவரத்துச் சேவையைப் பேணிச்செல்வதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதற்கு அமைய வீதியில் நிகழக்கூடிய விபத்துக்கள் பற்றி சாரதிகளுக்கு விழிப்பூட்டுவதும் இலத்திரனியல் அறிவித்தல் பலகைகளை நிறுவப்பட்டுள்ளன. அதே போன்று இந்த அதிவேக வீதியின் இரு பக்கங்களிலும் தொலைபேசி முறைமைகளும் நிறுவப்பட்டுள்ளன. இதனால் நாளில் 24 மணித்தியாலமும் தலைமை இயக்க அலுவலகத்துடன் தொடர்புகொள்ளக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன.
மக்கள் சீனக் குடியரசு அரசாங்கத்தின் 306 மில்லியன் ரூபா நிதியுதவியுடனும் 44 மில்லியன் ரூபாஉள்நாட்டு நிதி நிதியுடனும் இப்பாதை நிர்மாணிக்கப்பட்டது.கொழும்பு – கட்டுநாயக்கா அதிவேக வீதி 2013 – 10 – 27 ஆம் திகதி ஜனாதிபதியினால் மக்கள் பாவனைக்காகத் திறந்து வைக்கப்பட்டது.
கட்டுநாயக்காவிலிருந்து ஆமை வேகத்தில் கொழும்பு நகரை வந்தடையும் பொது மக்கள் பலர் இன்று ஆனந்தமும் ஆறுதலும் அடைகின்றனர்.
இவை எல்லலாவற்றுக்கும் மேலாக பொதுநலவாய உச்சி மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக இலங்கைக்கு வருகை தந்த பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கூட பெருமகிழ்ச்சியடைந்ததுடன் பேருவகையும் கொண்டனர்.இவர்கள் இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளை வெகுவாக பாராட்டிச் சென்றனர்.
வட கிழக்கு (கொழும்பு- கண்டி) அதிவேகப்பாதை
கருத்திட்டம் அறிமுகம்
உத்தேச வடக்கு – கிழக்கு (கொழும்பு – கண்டி) அதிவேகப்பாதை உத்தேச வெளிச் சுற்றுவட்டப் பாதையின் நுழைவாக இருக்கின்ற மற்றும் தற்பொழுது இருக்கும் கொழும்பு – கண்டி பாதையில் (யு1) கடவத்தை நகர எல்லையில் ஆரம்பிக்கப்படவிருக்கிறது. அது கட்டுகஸ்தொட்ட – குரநாகல் – புத்தளம் பாதைக்காக (யூ) ஹேதெனிய பிரதேசத்திலும் கண்டி – யாழ்ப்பாணப் பாதைக்காக (யு9) கட்டுகஸ்தோட்டையிலும் பிரவேசிக்க வழியேற்படுத்துகிறது.
இந்த அதிவேகப் பாதை 99 கி.மீ. கொண்டுள்ள அதேநேரத்தில் முதற்கட்டத்தின் கீழ் கடவத்தையிலிருந்து அம்பேபுஸ்ஸவிற்கும் இரண்டாவது கட்டம் அம்பேபுஸ்ஸவிலிருந்து கட்டுகஸ்தோட்டைக்கும் அமைக்கப்பட உத்தேசிக்கப்பட்டள்ளது.உத்தேச பாதையின் நிர்மாணத்தின் முதல் 25 கி.மீ. பகுதி வெள்ள அனர்த்தங்கள் ஏற்படும் பிரதேசத்தின் ஊடாகச் செல்லவிருக்கிறது.
அப்பிரதேசம் 2010ஆம் ஆண்டு மே மாதம் கடுமையான வெள்ளப் பாதிப்புக்குள்ளானது. இந்நிலையைக் கட்டுப்படுத்துவதற்காக இம்முதற் பகுதியில் தேவையான பிரதேசங்களுக்கு தூண்கள் மீது அமைக்கப்படும் பாதை முன்மொழியப்பட்டுள்ள அதேநேரத்தில் அதன் ஆரம்ப நீளம் சுமார் 9 கி.மீ. ஆகும்.
பிரதான துணைப்பாகம்
கட்டம் 1 - கடவத்த – அம்பேபுஸ்ஸ
நீளம் – கி.மீ. 48.2
ஓட்டப்பாதை நிரல்கள் – 04 (இன்னும் இரண்டு ஓட்டப்பாதை நிரல்களுக்கான இடவசதியுடன்)
இடைப் பரிமாறல் நிலையங்கள் - கடவத்தை, கம்பஹா, பலபோவ, அம்பேபுஸ்ஸ
உத்தேச ஓட்ட வேகம் - மணித்தியாலத்திற்கு கி.மீ. 100
கட்டம் 2 – அம்பேபுஸ்ஸ – கட்டுகஸ்தோட்டை
நீளம் – கி.மீ. 50.7
ஓட்டப்பாதை நிரல்கள் - 04
இடைப் பரிமாறல் நிலையங்கள் - அம்பேபுஸ்ஸ, தேவாலகம, றம்புகன, ஹத்தரலியத்த, ஹேதெனிய, கட்டுகஸ்தோட்டை
உத்தேச ஓட்ட வேகம் - மணிக்கு கி.மீ. 80
நோக்கம்
• மாற்றுப் பாதையொன்றைத் திறப்பதனால் வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல், மத்திய மாகாணங்களில் மலைப் பிரதேசங்களையும் கைத்தொழில் பிரதேசங்களையும் திறந்துவிடல்.
• உத்தேச அதிவேகப்பாதை வலையமைப்புக்குரிய தென்னிலங்கை அதிவேகப்பாதை, கொழும்பு – கட்டுநாயக்க அதிவேகப் பாதை மற்றும் வெளிச் சுற்றுவட்டப் பாதை என்பவற்றுடன் குறித்த பிரதேசங்களை இணைப்பதன் மூலம் அம்மக்களுக்கு நாட்டில் விரைவான போக்குவரத்து வசதியைப் பெற்றுக்கொடுத்தல்.
•பொருளாதார, கைத்தொழில், விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் என்பவற்றுக்குப் புதிய பிரதேசங்களைச் சேர்ப்பதன் மூலம் நாட்டில் முன்னேற்றத்தை ஏற்படுத்துதல்.
• ஓட்ட வேகத்தை அதிகரித்தல்.
• கொழும்பு – கண்டி பிரதான பாதையில் தற்பொழுது நிலவும் வாகன நெரிசலைக் குறைத்தல்.
புதியநிலைமை
சாத்தியக்கூற்று ஆய்வு 2001ஆம் ஆண்டில் பூர்த்தி செய்யப்பட்டதோடு உத்தேச பாதைக்கு மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
1ஆம் கட்டத்திற்காக அடிப்படை அளவை வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதோடு 2ஆம் கட்டத்தின் அடிப்படை அளவை வேலைகளும் பூர்த்தியடைந்து கொண்டிருக்கின்றன. 1ஆம் கட்டத்தின் 33 கி.மீ. ஆரம்பப் பணிகளுக்காக ஆரம்பத் திட்டம் பூர்த்திசெய்யப்பட்டுள்ள அதேநேரத்தில் விரிவான பொறியியலாளர் திட்டம் தயாராகிக் கொண்டிருக்கின்றது.
1ஆம் கட்டத்திற்கான மீளக் குடியமர்த்தும் செயற்பாட்டுத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. காணிச் சட்டத்தின் 2ஆம் பிரிவின் பிரகாரம் அளவை வேலைகள் பூர்த்தியடைந்துள்ள அதேநேரத்தில் கடவத்தையிலிருந்து செல்லும் 33 கி.மீ. பகுதிக்கான இறுதி நிர்மாணத் திட்டங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன.
1ஆம் கட்டத்திற்கான நீரியல் ஆய்வு பூர்த்தி செய்யப்பட்டுள்ள அதேநேரத்தில் நிலத்தின் ஆய்வுப் பணிகள் நடைபெறுகின்றன. முதல் 10 கி.மீ. இன் நில ஆய்வுப் பணிகள் ஏற்கெனவே பூர்த்தியடைந்துள்ளன.
கருத்திட்டத்தைச் செயற்படுத்துதல்
1ஆம் கட்டத்திற்கான தற்காலிக செலவு ரூ 70 மில்லியனாகும். 2ஆம் கட்டத்திற்கான செலவு ரூ 90 பில்லியனாகும். 1ஆம் கட்டத்தின் அல்லது அதன் ஒரு பகுதியின் ஒப்பந்த வேலைகளை ஆரம்பிப்பதற்கு வெளிநாட்டு நிதியுதவி அல்லது முதலீட்டாளர்எதிர்பார்க்கப்படுகின்றது. இக்கருத்திட்டத்திற்கு நிதியுதவி வழங்குகின்றவர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் சிலர் கவனம் செலுத்தியிருப்பதால் எதிர்காலத்தில் குறித்த வேலைகள் ஆரம்பிக்கப்படவிருக்கின்றன.
பயன்கள்
• இம்மாற்றுப் பாதை அமைக்கப்படுவதால் வடக்கு, கிழக்கு, வடமேல், மத்திய மாகாணங்களுக்கு வதிவிட மற்றும் கைத்தொழில் குடியேற்றங்கள் விரிவாக்கப்படுகின்றன.
• கைத்தொழில், விவசாயம் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அபிவிருத்தி என்பவற்றுக்குப் புதிய பிரதேசங்கள் திறந்துவிடப்படுதல்.
• சுற்றுலாக் கைத்தொழிலும் ஏனைய முதலீடுகளிலும் வளர்ச்சி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அதிவேகப்பாதை அமைப்புத் திட்டமானது,ஆசியாவின் ஆச்சரியமிக்க நாடாக மாறும் இலங்கையின் இலட்சியத்தின் ஒரு படிக்கட்டு என்றால் அது மிகையாகாது. பாதைகளில் தினசரி அதிகரித்து வரும் வாகனநெரிசல்களை நோக்கும் போது இலங்கையில் அதிவேகப்பாதைகளின் அவசியம் நன்கு உணரப்பட்டுள்ளது.
எனவே கண்டி கொழும்பு அதிவேகப்பாதை என்று ஆரம்பமாகுமோ? என விரல்களை எண்ணும் பலரையும் நாம் தினமும் சந்தித்துக்கொண்டு தான் இருக்கிறோம்.அந்த நாளும் விரைவில் உதயமாகட்டும் என நாமும் வாழ்த்திடுவோம்.





Time in Colombo
0 comments:
Post a Comment