செவ்வாய்க்கிழமை, 17 டிசெம்பர் 2013, 02:39pm
தென்னாபிரிக்காவின்
மறைந்த, முன்னாள்
ஜனாதிபதி நெல்சன்
மண்டேலாவின் வரலாறு இலங்கைக்கு அறிவூட்ட வேண்டும்.
வெற்றி பெற்று
பதவிக்கு வந்தபின்னர்
மாற்று இனத்தவரை
நோக்கி நீண்ட
மண்டேலாவின் நேசக்கரத்தை பற்றி தெரிந்து கொள்ள
வேண்டும்.
தனது
பதவிக் காலத்தை
நீடிக்க தமது
நாட்டின் அரசமைப்பை
மண்டேலா திருத்தவில்லை
என்பதை இலங்கை
அரசு தெரிந்து
கொள்ள வேண்டும்.
இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர்
மனோ கணேசன்
தெரிவித்தார்.
கொழும்பு
தமிழ்ச் சங்கத்தில்
நேற்று திங்கட்கிழமை
நடைபெற்ற தென்னாபிரிக்காவின்
மறைந்த, முன்னாள்
ஜனாதிபதி நெல்சன்
மண்டேலாவின் மறைவு குறித்து இடம்பெற்ற அஞ்சலி
நிகழ்வில் கலந்துகொண்டு
உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார்.
அங்கு
அவர் மேலும்
தெரிவித்ததாவது:
மண்டேலா
குறித்து கலந்துரையாடுவதற்கு
உலக பரப்பில்
இலங்கையைப் போல் பொருத்தமான நாடு இன்று
வேறு எதுவும்
இல்லை. அது
போல் மண்டேலா
குறித்துப் பேசுவதற்கு இன்றைய தருணத்தைவிட இந்த
நாட்டுக்குப் பொருத்தமான வேறு ஒரு தருணமும்
இல்லை.
இலங்கையிலும்
தமிழர்களின் சாத்வீக போராட்டத்துக்கு, இலங்கை அரசுகள்
அரச பயங்கரவாதத்தின்
மூலமாக பதில்
கொடுத்தன.
இந்த
நாட்டில் புலிகளுக்கு
எதிராகப் பெற்ற
வெற்றி, தமிழ்
சமூகத்துக்கு எதிராக பெற்றுக் கொண்ட வெற்றியாக
மாற்றப்பட்டுள்ளது. அது சிங்கள
பெளத்தர்களின் வெற்றியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனால்தான்
இராணுவ வெற்றியை
பெற்றுக் கொண்ட
அரசிடமிருந்து தமிழர்களை நோக்கி எந்தவொரு நேசக்கரமும்
நீட்டப்படவில்லை.
மண்டேலாவின்
முழுமையான வரலாறையும்
அறிந்து கொள்ளாமல்தான்
இங்கிருந்து சிலர் ஜோஹன்னஸ்பர்க் சென்று மண்டேலாவின்
மரணச் சடங்கிலும்
கலந்து கொள்கின்றனர்.
மண்டேலாவின் வரலாறு இந்த நாட்டுக்கு அறிவூட்ட
வேண்டும்.
மண்டேலா
ஒரு கறுப்பு
இனத்தவர். எனவே
அவரது வரலாற்றை
எவரும் மேற்கத்தைய
வெள்ளையர்களின் சதி என்று சொல்லிவிட முடியாது.
மண்டேலாவின் உண்மை வரலாறு குறித்து இவர்கள்
தெரிந்து கொள்ள
வேண்டும். என்றார்.





Time in Colombo
0 comments:
Post a Comment