
செவ்வாய்க்கிழமை, 17 டிசெம்பர் 2013,9:09pm
2014 ஜனவரி 15 ஆம் திகதியிலிருந்து இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேரூந்துகள் மற்றும் தனியார் பேரூந்துகளை ஒரே நேர அட்டவணையில் சேவையில் ஈடுபடுத்த அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். நாடு முழுவதிலும் உள்ள 6 மில்லியன் பேரூந்து பிரயாணிகளின் தேவைகளை நிறைவு செய்ய 4314 இ.போ.ச. பேரூந்துகளும் 17129 தனியார் பேரூந்துகளும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பிரயாணிகளுக்கு சிறந்த சேவையை வழங்கவும் போட்டிகளைத் தவிர்க்கவும் ஒரே நேர அட்டவணையில் சகல பேரூந்துகளையும் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.




Time in Colombo
0 comments:
Post a Comment