வியாழக்கிழமை, 12 டிசெம்பர் 2013,10:40am
வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் அடிப்படை
வசதிகள் அனைத்தும்
செய்து தரப்படும்
என்ற அரசின்
ஆசை வார்த்தையை
நம்பிக் கிளாலிப்
பகுதியில் குடியமர்ந்தவர்கள்
இரு வருடங்களுக்கு
மேலாகியும் மின்சார வசதி கிடைக்காமல் ஏமாற்றத்துக்
குள்ளாகியுள்ளனர்.இந்தப் பகுதியைச் சேர்ந்த சுமார் 250 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தமது பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியைக் கருத்திற்கொண்டு விரைவாக தமக்கு மின்சார வசதியை வழங்குமாறு சம்பந்தப்பட்டவர்களைக் கோரியுள்ளனர்.
போர் காரணமாக கிளாலிப் பகுதியிலிருந்து இடம் பெயர்ந்த குடும்பங்கள் "வடக்கின் வசந்தம்' திட்டத்தின் கீழ் சகல அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தமைக்கமைய 19 வருடங்களுக்குப் பின் 2010 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் சொந்த இடங்களில் மீள்குடியேறினர்.
வாழ்விடங்கள் அனைத்தும் அழிக்கப்பட்ட நிலையில் வெறுங்கையுடன் மீள்குடியேறிய 250 குடும்பங்களில் இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் 172 குடும்பங்களுக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டன.
"சோ ஆ' நிறுவனம் 20 குடும்பங்களுக்குத் தற்காலிக வீடுகளை அமைத்துக் கொடுத்துள்ளது. இந்த நிலையில் அந்தப் பகுதிக்கு மின்சார வசதி இதுவரை ஏற்படுத்திக் கொடுக்கப்படாததால் மண்ணெண்ணெய் விளக்கின் உதவியுடன் இருள் சூழ்ந்த நிலையிலேயே இவர்கள் வாழ்கின்றனர்.
எனவே தமது பிள்ளைகளின் எதிர்காலத்தையும் கல்வி வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு விரைவாக மின்சார வசதியை ஏற்படுத்தித் தருமாறு சம்பந்தப்பட்டவர்களை இந்தப் பகுதி மக்கள் கோரியுள்ளனர்.





Time in Colombo
0 comments:
Post a Comment