ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இந்த ஆண்டு கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை
தோற்கடித்து, சிறிலங்காவைக் காப்பாற்றுவதற்காக, ஜெனிவாவுக்கு அனுப்பி
வைக்கப்பட்ட குழுவுக்கு 59 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
இந்த தகவலை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ளார்.
தேசிய பாதுகாப்புக் கருதி, இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்த
உறுப்பினர்களின் விபரங்களை வெளியிட முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
“எமது முயற்சிக்கு பல தனிநபர்கள் ஆதரவளித்தனர் இப்போதும் ஆதரவளிக்கின்றனர்.
அந்தக் குழுக்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் பெயர் விபரங்களை வெளியிடுவது அவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கலாம் .
சிறிலங்காவுக்கு
எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானம் நியாயமற்றது என்பதை ஐ.நா மனித உரிமைகள்
பேரவை உறுப்பு நாடுகளுக்கு விளக்க கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
பல நாடுகளுக்கு நானே நேரில் சென்று வெளிவிவகார அமைச்சர்களை சந்தித்தேன்.
குறிப்பிட்ட நாடுகளின் தூதரகங்களுக்கும் விளக்கமளிக்கப்பட்டன.
சிறிலங்கா
அதிபரின் சிறப்பு தூதுவர்கள் குறிப்பிட்ட நாடுகளின் தலைவர்களை சந்தித்து,
வேண்டுகோள்களை விடுத்தனர்.” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.




Time in Colombo
0 comments:
Post a Comment