இராணுவ மருத்துவச் சேவை மற்றும் பொறியியல் சேவை
போன்ற முக்கிய பிரிவுகளில் பணியாற்றும் அதிகாரிகளை தவிர, இராணுவத்தின் ஏனைய
பிரிவுகளில் பணியாற்றும் அதிகாரிகள் சாதாரண தரம் வரையான கல்வித் தகுதிகளை
கொண்டவர்கள் என இலங்கை நிர்வாக சேவை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அரச நிர்வாக துறைகளில் ஓய்வுபெற்ற இராணுவ பிரிகேடியர் மற்றும் ஜெனரல்களை நியமிப்பது தவறானது எனவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
நிர்வாக சேவைகளில் இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்படுவது மூலம் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்று அரச நிர்வாகத்துறையில் பணியாற்றிவரும் இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகளுக்கு அநீதி ஏற்பட்டுள்ளது.
அரச நிர்வாக சேவை அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ள இராணுவ அதிகாரிகளில் 98 வீதமான அதிகாரிகள் 10 ஆம் வகுப்பு வரை மட்டுமே கல்வி கற்றுள்ளனர்.
இந்த கல்வி தகுதி குறைப்பாட்டை மறைப்பதற்காக இராணுவ அகடமிகளின் மூலம் பல்வேறு டிப்ளோமாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த டிப்ளோமாக்கள் ஒரு கல்வி தகுதியாக ஏற்றுக்கொள்ளப்படும் என எங்கும் குறிப்பிடப்படவில்லை.
10 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள இந்த இராணுவ அதிகாரிகளின் கீழ் உயர் தரத்தில் சித்தியடைந்தவர்கள், நிர்வாக சேவையின் பட்டதாரி அதிகாரிகளும் பணியாற்றி வருவது பல பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் நிர்வாக சேவையில் நியமிக்கப்பட்டுள்ள இராணுவ அதிகாரிகளின் கல்வி தகுதி என்ன என்பது தொடர்பில் முடிந்த மக்களுக்கு வெளியிடுமாறு நிர்வாக சேவை அதிகாரிகள் சவால் விடுத்துள்ளனர்.

Time in Colombo
0 comments:
Post a Comment