வடக்கு
மாகாண ஆளுநருக்கும் அண்மையில் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட வடக்கு
மாகாண சபைக்கும் இடையில் தற்போது முறுகல்நிலை வலுத்துவரும் நிலையில்,
செப்ரெம்பர் மாதத்தில் இடம்பெற்ற தேர்தல் மூலம் தமிழ் மக்கள் அளித்த
தீர்ப்பை மதித்து சிறிலங்காவின் மத்திய அரசாங்கமும் மாகாண ஆளுநரும்
நடந்துகொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
வடக்கு
மாகாண சபையானது தனது நிர்வாகத்தை முன்னெடுப்பதற்கு வடக்கு மாகாண ஆளுநரான
முன்னாள் இராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தடுத்து வருவதாக குற்றம்
சாட்டப்பட்டுள்ளது.
"தமிழ் மக்கள் செப்ரெம்பர் மாதத்தில் இடம்பெற்ற
வடக்கு மாகாண சபைக்கான தேர்தலில் தமது தீர்ப்பை வழங்கியுள்ளனர். மக்களின்
இந்தத் தீர்ப்பானது மதிக்கப்பட வேண்டும். தேர்தலுக்கு முன்னர் வடக்கு மாகாண
சபையை ஆண்ட அனைவரும் இந்தத் தீர்ப்பை மதிக்க வேண்டும். மக்களால்
வழங்கப்பட்டுள்ள ஜனநாயகத் தீர்ப்பானது இந்த வடக்கு மாகாண சபையின்
தேர்தலுக்கு முன்னான ஆட்சிக்கு எதிரானதாகும்" என தமிழ்த் தேசியக்
கூட்டமைக்கின் தலைவர் சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.
"வடக்கு
மாகாண சபையானது வினைத்திறனான வகையில் இயங்காவிட்டால், வடக்கு மாகாண சபைத்
தேர்தல் ஒரு போலியானதெனவே கருதப்பட முடியும். இவ்வாறான ஒரு தீர்வை எட்டுவது
தவிர்க்கப்பட முடியாததாகும்" என த.தே.கூ தலைவர் சம்பந்தன்
சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு மாகாண சபைத் தேர்தல் இடம்பெறுவதற்கு
முன்னர் இதனை ஆண்ட மிக முக்கிய நபர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு
எதிராக பரப்புரை செய்துவருகின்றனர் எனவும் சம்பந்தன் குற்றம்
சுமத்தியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக வடக்கு மாகாண முதலமைச்சர்
சி.வி.விக்னேஸ்வரன் அதிபர் செயலகத்துடன் தொடர்ந்தும் பேச்சுக்களில்
ஈடுபட்டு வருகிறார். இந்தப் பேச்சுக்களின் விளைவுகள் என்ன என்பதை
அறிவதற்காக தற்போது த.தே.கூ காத்திருப்பதாக சம்பந்தன் விளக்கினார்.
தனது
வடக்கு மாகாண சபையானது வலுவற்றது எனவும் தற்போதும் ஆளுநர் மாகாண
நிர்வாகங்களில் தலையீடு செய்வதாகவும் அதிகாரபூர்வ நியமனங்களை
வழங்குவதாகவும் முதலமைச்சர் முறைப்பாடு செய்துள்ளார். ஒன்றுபட்ட
சிறிலங்காவுக்குள் இதற்கான தீர்வு எட்டப்படுவதுடன், வடக்கில் வாழும் தமிழ்
மக்களின் அவாக்களை சாத்தியப்பாடான வழிகளில் தீர்ப்பதையே வடக்கு மாகாண சபை
தனது நோக்காகக் கொண்டுள்ளதாகவும் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
அதிபர்
செயலகத்தின் மீள்குடியேற்றப் பிரிவால் ஐக்கிய நாடுகள் சபையிடம்
கையளிக்கப்பட்ட கடிதத்தின் பிரதிகள் வடக்கு மாகாண ஆளுநர், மாகாண முதன்மைச்
செயலாளர் மற்றும் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதிகளுக்கு
அனுப்பப்பட்ட போதிலும் வடக்கு மாகாண முதலமைச்சருக்கு இதன் பிரதி
அனுப்பப்படவில்லை என சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.
"வடக்கு
மாகாண மக்களால் தமது விவகாரங்களைக் கையாள்வதற்காகவும் தம்மை
நிர்வகிப்பதற்காகவும் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாகாண
சபையின் முதலமைச்சருக்கு இந்தக் கடிதத்தின் பிரதி அனுப்பப்படவில்லை" என
சம்பந்தன் குற்றம் சுமத்தியுள்ளார். இந்தக் கடிதமானது நிவாரண மற்றும்
புனர்வாழ்வுடன் தொடர்புபட்டது எனவும், சமூக சேவைகள், புனர்வாழ்வு போன்ற ஏழு
விடயங்கள் மாகாண சபையின் கீழ் 13வது திருத்தச் சட்டத்தின் பிரகாரம்
காணப்படுவதாகவும் சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.
"இவ்வாறான
சிறிலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கைகள் யார் எதனை வேண்டுமானாலும் செய்யலாம்
என்கின்ற நிலையைத் தோற்றுவித்துள்ளதா? தான் விரும்பியதைச் செய்வதன் மூலம்
வடக்கு வாழ் மக்களால் வழங்கப்பட்ட ஜனநாயகத் தீர்வைத் தட்டிக்கழிக்க
மறுதலிக்க முடியும் எனத் தனிப்பட்ட ஒருவர் கருதி தான் விரும்பியவாறு
செயற்பட முடியுமா? வடக்கு மாகாண சபையின் நோக்கம் என்ன? ஏன் இங்கு தேர்தல்
ஒன்று நடாத்தப்பட்டு முதலமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட்டார்? இவ்வாறான
தேர்தல் ஒன்று நடாத்தப்பட்டு நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டால் ஐ.நாவுக்கு
அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரதி அதாவது பாதிக்கப்பட்ட, இடம்பெயர்ந்த
மக்களின் நிவாரணம் மற்றும் புனர்வாழ்வு தொடர்பான கடிதத்தின் பிரதி ஏன்
வடக்கு மாகாண முதலமைச்சருக்கு அனுப்பப்படவில்லை?" எனவும் சம்பந்தன்
கேள்வியெழுப்பியுள்ளார். |
0 comments:
Post a Comment