யாழ். போதனா வைத்தியசாலையின் தற்காலிக தொண்டர் களாக கடைமையாற்றும் தொண்டர்களுக்கு நிரந்தர நியமனம் கோரி ஈடுபட்டுவரும் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கும் முகமாக மருத்துவ சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் ஸ்ரீலங்கா ஜனராஜ சௌக்கிய சுகாதார சங்கத்தின் யாழ். கிளையின் சிற்றூழியர்களும் இணைந்து ஒரு மணிநேர கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று காலை 9 மணி முதல் 10 மணி வரையான ஒரு மணிநேர அடையாள கவனயீர்ப்புப் போராட்டத்தினை குறித்த உத்தியோகத்தர்கள், சிற்றூழியர்களும் முன்னெடுத்ததுடன் இப்போராட்டத்தில் மருந்துவர்கள், தாதியர்களும் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியிருந்தனர்





Time in Colombo
0 comments:
Post a Comment