இலங்கை
கப்பல் கூட்டுத்தாபனத்துக்கு மீண்டும் உயிர் கொடுப்பதற்காக, சீனாவிடம்
இருந்து, இரண்டு சரக்குக் கப்பல்களை சிறிலங்கா அரசாங்கம் கொள்வனவு
செய்யவுள்ளது.
இதற்கான அனுமதியை சிறிலங்கா அமைச்சரவை கடந்த திங்கட்கிழமை வழங்கியுள்ளது.
இந்தக் கப்பல்களைக் கொள்வனவு செய்வதற்கு அனுமதி கோரும் பத்திரங்களை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச சமர்ப்பித்திருந்தார்.
இதற்கு,
அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், இந்தக் கப்பல்களை கொள்வனவு
செய்வதற்கான கடன்களை பெறுவதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளும்படி, வெளியக
வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.
70 மில்லியன் டொலர் செலவில் இந்தக் கப்பல்கள் இரண்டும் சீனாவிடம் கொள்வனவு செய்யப்படவுள்ளன.
இவை 64 ஆயிரம் தொன் எடை கொண்டவையாகும்.
இந்தக்
கப்பல்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் சிறிலங்காவிடம் ஒப்படைக்கப்படும்
என்று சிறிலங்கா அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தகவல் வெளியிட்டுள்ளார். |
0 comments:
Post a Comment