சிறிலங்காவின்
தேசிய பாதுகாப்பு ஊடக நிலையத்தின் முன்னாள் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹுலுகல்ல,
நஞ்சருந்தி தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக ஊடகங்களில் வெளியான செய்தியை
நிராகரித்துள்ளார்.
நஞ்சருந்தி தற்கொலைக்கு முயன்ற நிலையில்
லக்ஸ்மன் ஹுலுகல்ல கொழும்பில் லங்கா மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளதாக, நேற்று மாலை சிறிலங்கா ஊடகங்கள் பலவற்றில்
செய்திகள் வெளியாகின.
எனினும், தாம் மருத்துவமனையில்
அனுமதிக்கப்படவில்லை என்றும், நலமுடன் வீட்டில் இருப்பதாகவும் அவர்,
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் நேற்றிரவு தெரிவித்தார்.
“ஊடகங்களால் என்னைக் கொல்ல முடியாது. நான் ஊடகங்களுக்கு மேலாக இருக்கிறேன்.
இதுவும் கூட ஊடகங்களின் இன்னொரு சாகசம். நான் நஞ்சருந்தியிருந்தால் இந்தளவுக்கும் இறந்திருப்பேன். ” என்று அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று
எந்தவொரு தேவைக்காகவும் எந்த மருத்துவமனைக்காவது சென்றீர்களா என்று
அவரிடம் கேள்வி எழுப்பிய போது, தனது பயணம் குறித்து ஊடகங்களிடம் தெரிவிக்க
வேண்டியதில்லை என்று பதிலளித்துள்ளார்.
மருத்துவமனைக்கு சென்றேனா
அல்லது எதற்காக சென்றேன் என்றெல்லாம் ஊடகங்களிடம் கூறிக் கொண்டிருக்க
வேண்டியதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் நம்பிக்கைக்குரியவராக திகழ்ந்தவர் லக்ஸ்மன் ஹுலுகல்ல.
கடந்த
முதலாம் நாள் திடீரென தேசிய பாதுகாப்பு ஊடக நிலையம் கலைக்கப்பட்டு அதன்
பணிப்பாளர் பதவி இவரிடம் இருந்து பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. |
0 comments:
Post a Comment