S26, டிச. 10.12.13.
நிறவெறிக்கு எதிராக போராடி தென்னாப்பிரிக்கா மக்களுக்கு விடுதலை பெற்றுத்தந்த முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா (95) கடந்த வியாழக்கிழமையன்று இயற்கை எய்தினார். அவரது இறுதிச் சடங்கு நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான மக்களுடன் உலகத்தலைவர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
ஜோகன்னஸ்பர்க் நகரின் எப்.என்.பி. ஸ்டேடியத்தில் பன்னாட்டு தலைவர்கள் கலந்துகொண்ட நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இருபதாம் நூற்றாண்டின் கடைசி மிகப்பெரும் சுதந்தர போராட்ட தியாகியான மண்டேலா, வரலாற்றின் ஒரு மாபெரும் சகாப்தம்.
ஒரு தேசத்திற்கு நீதியைப் பெற்றுத்தந்த அந்த மகாமனிதர், உலகின் ஆரோக்கிய சிந்தனை மற்றும் செயல்பாட்டிற்கும் கற்பித்து இருந்தார். இது சிறைச்சாலையில் இருந்த மண்டேலா போன்ற கைதிகள் மட்டுமல்ல ஜெயில் வார்டன்களுக்கும் சுதந்திரம் பெற்று தந்தது.
மண்டேலா போன்ற ஒரு மனிதரை இனி ஒருபோதும் நாம் பார்க்கப் போவதில்லை. மடிபாவை (மண்டேலாவை) நான் வணங்கும் போதெல்லாம், நான் ஒரு சிறந்த மனிதராக இருக்க வேண்டும் என அவர் விரும்பினார்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்திருந்த கியூபா தலைவர் ரால் கேஸ்ட்ரோவுக்கு, ஒபாமா கைகுலுக்கி வரவேற்றார். வரும் ஞாயிறன்று அவரது சொந்த ஊரான குனுவில் அடக்கம் செய்யப்படவுள்ள அவரது உடலுக்கு மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.





Time in Colombo
0 comments:
Post a Comment