தேசியப்
பிரச்சினைக்குத் தீர்வு காணவும் நல்லிணக்கத்தை எட்டவும், தமது அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முன்வருமாறு தமிழ்த் தேசியக்
கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச.
சிறிலங்கா
நாடாளுமன்றத்தில் நேற்று வரவுசெலவுத் திட்ட விவாதத்தின் நிறைவில், பதிலுரை
நிகழ்த்திய போதே அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணவும், தேசிய நல்லிணக்கத்தை அடையவும், எல்லாக் கட்சிகளும் இணைந்து செயற்பட வேண்டும்.
தேசிய
ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்
இரா.சம்பந்தனும், வடக்கு மாகாணமுதலமைச்சர் விக்னேஸ்வரனும் எமது நாட்டுக்கே
உரித்தான வகையில் தீர்வொன்றைப் பெற்றுக் கொள்வதற்காக அரசாங்கத்துடன்
இணைந்து செயற்பட வேண்டும்.
உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட எல்லா நாடுகளுக்கும் சிறிலங்கா முன்னுதாரணமாகத் திகழமுடியும்.
இங்கு தீவிரவாதம் மீண்டும் துளிர் விடுவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார். |
0 comments:
Post a Comment