பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை
உடனடியாக, வட,கிழக்கு மாகாண மக்களுக்குச்
சார்பாக வழிநடத்துவதே
எம்முன் இருக்கும்
பாரிய பணி
என்று வடக்கு
மாகாண முதலமைச்சர்
சி.வி.
விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வட மாகாணசபையின்
வரவுசெலவுத்திட்ட விவாதத்தை முடித்து
வைத்து நேற்று
நிறைவுரையாற்றிய போதே அவர்
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் தனது
உரையில் மேலும்
தெரிவித்துள்ளதாவது,
இன்று 2014ம் ஆண்டுக்கான எமது பாதீடு
விவாதம் இறுதிக்கட்டத்திற்கு
வந்துள்ளது.
எமது சகோதர
உறுப்பினர்கள் ஆட்சி செய்யும் கட்சி -எதிர்க்கட்சி
என்று பேதம்
பார்க்காமல், தமிழ் பேசும் உறுப்பினர்கள் -சிங்களம் பேசும் உறுப்பினர்கள் என்று
பேதம் பார்க்காமல்,
தமிழர்கள் - முஸ்லீம்கள் என்ற பேதம் பார்க்காமல்
எமது விவாதத்தை
ஒரு சுமூகமான
முடிவுக்குக் கொண்டு வரத் தம்மாலான உதவிகளைச்
செய்துள்ளார்கள்.
ஆங்காங்கே நடைபெறும், நடைபெற்றுள்ள தவறான நடவடிக்கைகள்
பற்றிப் பேசினார்கள்.
வருங்காலம் நன்றாக அமைய நாங்கள் எடுக்க
வேண்டிய நடவடிக்கைகள்
பற்றிப் பேசினார்கள்.
பணநெருக்கடியினால் எமக்கு எதையுமே
செய்ய முடியாத
நிலை ஏற்பட்டுவிடுமோ
என்ற அச்சத்தை
வெளிப்படுத்தினார்கள்.
இராணுவப் பிரசன்னம் எமக்கு ஏற்படுத்தியிருக்கும் அவலங்கள், நட்டங்கள் பற்றி அங்கலாய்த்தார்கள்.
காணிகள் பறிபோவதைப்
பற்றிக் கண்டித்தார்கள்.
வினைத்திறன் அற்ற உள்ளூராட்சி சபைகள் பற்றியும்
வேறு எமது
செயற்கூடங்கள் பற்றியும் மனவருத்தம் தெரிவித்தார்கள்.
இலஞ்சம், ஊழல் மலிந்து வரும் நிலை
பற்றிக் கவலைப்பட்டுக்
கூறினார்கள், நடந்து முடிந்த போரினால் ஏற்பட்டுள்ள
பாரிய சமூகச்
சீர்கேடு பற்றிக் குறிப்பிட்டார்கள்.
வடமாகாணத்தில் என்றுமே இல்லாதவாறு இளைஞர், யுவதிகளின்
மத்தியில் ஏற்பட்டிருக்கும் கலாச்சார,
ஒழுக்க, சமூகச்
சீரழிவு, பற்றியும் நீதிநெறி, அறமாகியன அப்பட்டமாக
வழுகிச் செல்வதைப்
பற்றியும் குறிப்பிட்டார்கள்.
காணாமல்போனோர், கைதாகிப் பல வருடகாலம் சிறையில்
வாழும் எம்மவர்
பற்றிப் பேசினார்கள்.
எனினும் கிடைத்துள்ள
குறைந்த நிதியின்
அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இவ்வருடத்தைய
பாதீடு பற்றி
பலமான எதிர்ப்புக்கள்
எதுவும் தெரிவிக்கப்
படவில்லை.
அதுவும் எதிர்க்கட்சியினர்
எமக்களிக்கும் ஆதரவு எம்மால் பாராட்டப்பட வேண்டியதொன்று.
தொடர்ந்தும் நாங்கள் அனைவரும் ஒரே குடும்பத்தவர்
போல் அடுத்த
ஒரு வருடத்திற்கும்
சேர்ந்து கருமமாற்ற விழைவோமாக!
அதற்கடுத்த வருடம் பற்றி அடுத்த வருடத்தைய
பாதீட்டின் போது கூறுவேன்!
என்னைப் பொறுத்தவரையில்
என் நோக்கு
தூரநோக்காகவே இருந்து வருகின்றது.
பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் எமக்குப் போதுமானதல்ல
என்பதையும் அதன் குறைபாடுகளை எடுத்தியம்பியும் எமக்குரிய நியாயமான அதிகாரங்களை வெகு
விரைவில் பெற நாம் என்ன செய்ய
வேண்டும் என்ற கேள்வியே என்முன் நிற்கின்றது.
இருக்கும் சட்ட திட்டங்களைக் குறைகூறும் அதேநேரம்
இருப்பதை எவ்வாறு செயற்திறன் நோக்கி அழைத்துச்
செல்லலாம் என்ற கேள்வியும் என் மனதில்
பூதாகாரமாக மேலோங்கியுள்ளது.
இனி வருங்காலங்களில்
பல சிக்கல்களை
நாங்கள் எதிர்நோக்கப்
போகின்றோம். அவற்றிற்கு முகம் கொடுப்பது எப்படி
என்ற கேள்வியும்
எழாமல் இல்லை.
அதாவது வெறுமனே
சட்டதிட்டங்களைக் குறை கூறிவிட்டு
நாங்கள் எங்கள்
பதவிகளைப் பாதுகாத்துக் கொண்டு வாளாதிருக்கலாம். ஆனால் நாங்கள் எவரும் அதற்காக
இங்கு வரவில்லை.
எமது வாக்காளப்
பெருமக்களுக்குப் போதுமான நிவாரணங்களைப்
பெற்றுக் கொடுக்கவும் வடமாகாண மக்கள் என்ற
முறையில் எமது அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கவும்
என்ன செய்யவேண்டும்
என்ற எண்ணமே
எம் ஒவ்வொருவர்
மனதிலும் மேலோங்கி நிற்கின்றது என்பதை நான்
உணர்கின்றேன்.
இருப்பதை செயற்திறன் நோக்கி எப்படி அழைத்துச்
செல்லலாம் என்று ஆராய்ந்தோமானால் பதின்மூன்றாவது திருத்தச்சட்டத்தின் உறுப்புரை
154(T) என்பதின் ஏற்பாடுகளை நாம்
கூடிய அளவு
பாவிக்கலாம் என்பது ஒரு கருத்து.
அதாவது பதின்மூன்றாவது
திருத்தச் சட்டத்தை இதுவரை காலமும் நடைமுறைப்படுத்த
எத்தனித்த அதிகார மையமானது மத்திய அரசாங்கமே.
மாகாணசபைகளுக்கு அவற்றின் சட்டம்
பற்றிய பணிப்புக்களும்,
வழிநடத்தலும் ஆற்றுப்படுத்தலும் நடைபெற்று
வந்தன. இதனை
வடக்கு கிழக்கு
தவிர்ந்த மாகாணசபைகள் இதுவரை எதிர்க்கவில்லை.
ஆனால் முதலில்
கிழக்கு மாகாணசபையும்
இப்பொழுது வட மாகாணசபையும் மத்தியிலிருந்து பதின்மூன்றாவது திருத்தச்
சட்டத்தை நெறிப்படுத்துவதைக் கண்டிக்கின்றன.
அதுவும் இராணுவப்
பின்னணி கொண்ட
ஆளுநர்களை நியமித்து அவ்வாறு செய்வது ஏற்றுக்கொள்ள
முடியாத ஒரு
செயல் என்று
எடுத்துக் கூறி வருகின்றன.
தமிழ் பேசும்
மக்களின் செயற்பாடு ஒற்றுமைப்பட்டு
நடைபெற்று வந்ததானால் கிழக்கின் குரல் அங்கிருந்தே
மிகத்திடமாக வெளிவந்திருக்கும்.
துரதிஷ்டவசமாக அங்கு நடப்பில் இருக்கும் பெரும்பான்மையான
மக்கட் தொகையினரின்
மனதுக்கு மாறாகவே ஆட்சி நடைபெறுகிறது.
தமிழ்பேசும் தமிழ், முஸ்லிம் கட்சிகள் ஒன்று
சேர்ந்து மாகாணசபையை நடத்தியிருந்தால்
அவர்களும் சேர்ந்து எம்மைப் போலவே குரல்
கொடுத்திருப்பார்கள்.
எது எவ்வாறிருப்பினும்
உடனே எம்முன்
இருக்கும் பாரிய பணி பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை வட-கிழக்கு
மாகாண மக்களுக்குச்
சார்பாக வழிநடத்துவதே.
அதன் குறைகளைக்
கூறிக்கொண்டு எமது அரசியல் இலக்குகளைப் பற்றியே
கூறிக் கொண்டிருந்தால்
பாதிக்கப்பட்ட எம்மக்கள் எம்மை மன்னிக்க மாட்டார்கள்.
சாய் கதிரைகளில்
இருந்து கொண்டு
அரசியல் விமர்சனங்களில்
ஈடுபடுவோருக்கு பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை அவலங்கள்
பற்றி கரிசனை
இருப்பதற்குக் காரணமில்லை.
|
0 comments:
Post a Comment