தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள உள்ளூராட்சி சபைகளில்
சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டங்களைத் தோற்கடித்த, உறுப்பினர்கள்
மீது கடும் நடவடிக்கை எடுப்பதென்று, நேற்று வவுனியாவில் நடந்த கூட்டத்தில்
முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
கட்டுப்பாட்டில் உள்ள வல்வெட்டித்துறை நகரசபை மற்றும், வலிகிழக்கு,
நாவிதன்வெளி பிரதேசசபைகளின் வரவுசெலவுத் திட்டங்களை எதிர்த்து வாக்களித்து
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களே தோற்கடித்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து நேற்றைய கூட்டத்தில் ஆராயப்பட்டது.
இதையடுத்து,
உள்ளுராட்சி சபைகளில் வரவுசெலவுத் திட்டங்களைத் தோற்கடிப்பதற்காக
எதிர்த்து வாக்களித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களை
கட்சியில் இருந்தும் – சபை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்குவது உட்பட
கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை,
இரணைமடுவில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டம்
தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை குறித்தும் இந்தக் கூட்டத்தில்
விவாதிக்கப்பட்டுள்ளது.
பின்னர், கருத்து வெளியிட்ட தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், இதுகுறித்து, வடக்கு மாகாண
முதலமைச்சர் நிபுணர் குழுவொன்றை நியமித்து ஒரு அறிக்கையை பெறவுள்ளதாகவும்,
அந்த அறிக்கை வந்த பின்னர், மேலதிகமாக பேச்சுக்கள் நடத்தப்பட்டு
முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். |
0 comments:
Post a Comment