அனைத்துலக
கடல் எல்லைச் சட்டங்களை மீறி, சிறிலங்காவின் கடல் எல்லைக்குள் நுழையும்
எந்த மீன்பிடிப் படகும் பறிமுதல் செய்யப்படும் என்று சிறிலங்கா அரசாங்கம்
அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக சிறிலங்காவின் கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தகவல் வெளியிடுகையில்,
மீன்பிடிப் படகுகளில் உள்ள மீனவர்கள் அனைத்துலக சட்டங்களுக்கு இணங்க நடந்து கொள்ள வேண்டும்.
191 சிறிலங்கா மீனவர்களையும், 36 படகுகளையும் இந்தியா தடுத்து வைத்துள்ளது.
தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவின் தலையீட்டினால், இவர்களை விடுதலை செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின்
விவசாய அமைச்சர் சரத் பவாருடன் மீனவர்களின் பிரச்சினை குறித்து
பேச்சுவதற்கு அடுத்தமாதம் புதுடெல்லி வருமாறு இந்திய வெளிவிவகார அமைச்சர்
சல்மான் குர்ஷித் அழைப்பு விடுத்துள்ளார்.
எனினும், பயணத்துக்கான நாள் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். |
0 comments:
Post a Comment