செவ்வாய்க்கிழமை, 24 டிசெம்பர் 2013,8:30am
உயர் தரப் பரீட்சையில்
சாதனை படைத்தோருக்கு பரிசில்கள் வழங்கும் வைபவத்தில் ஜனாதிபதி
பயங்கரவாதத்தை ஒழித்து வடக்கில் சமாதான சூழலை
உருவாக்கியதன் பிரதிபலனே தற்போது அங்கு ஏற்பட்டுள்ள கல்வி வளர்ச்சியாகும்
என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
வடக்கில் இருந்து இம்முறை அதிகளவான மாணவர்கள் பல்கலைக்
கழகத்துக்கு செல்லக் கூடிய தகைமைகளைக் கொண்டிருப்பது நாட்டின்
கல்வித்துறைக்குக் கிடைத்த வெற்றி யாகுமென ஜனாதிபதி தெரிவித்தார்.
க. பொ. த. உயர்தரப் பரீட்சையில் உயர் புள்ளிகளைப்
பெற்றுள்ள மாணவர்கள் நேற்று அலரிமாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
அவர்களைச் சந்தித்தனர். இதன் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
இம்முறை க. பொ. த. உயர் தரத்தில் அகில இலங்கை ரீதியில்
ஒவ்வொரு பாடங்களிலும் அதிஉயர் புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட தத்சரணி அமாயா,
அதித வீரசிறி டயஸ், எரந்தி காஞ்சனா, மெத்சரணி லொக்குகே, துனீஷா தரங்கி
பர்னாந்து ஆகியோரே ஜனாதிபதியைச் சந்தித்துள்ளனர். அவர்களை ஜனாதிபதி அவர்கள்
வாழ்த்தியுள்ளதுடன் மக்கள் வங்கி தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான காசோலைகளை
அந்த மாணவர்களுக்கு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
வடக்கில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு அங்கு சமாதானம்
உதயமாகியுள்ளதோடு அதன் பிரதி பலனாக தற்போது வடக்கின் மாணவர்கள் கல்வியில்
முன்னணியில் திகழ்கின்றனர். வரலாற்றில் முதல் தடவையாக க. பொ. த. உயர்தரப்
பரீட்சையில் சித்தியடைந்து பெருமளவிலான மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு தகைமை
பெற்றிருப்பது வட மாகாணத்தில்தான் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
புத்தகங்களுக்குப் பதிலாக சயனைட் குப்பியை கழுத்தில்
தொங்கவைத்து சிறுவர் படையணியில் சேர்க்கப்பட்ட வடக்கின் சிறுவர்கள் இன்று
கல்வியில் சாதனை படைத்து வருகின்றனர். இது இந்த நாட்டின் கல்வித்துறை
பெற்றுக் கொண்ட மாபெரும் வெற்றியாகும் என இங்கு கருத்துத் தெரிவித்த
கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். தெற்கிலுள்ள பாடசா லைகளுக்குப்
பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள வசதிகள் எதுவித குறைவின்றி வடக்கிற்கும்
பெற்றுக் கொடுக்கப்பட்டு வருகின்றன.





Time in Colombo
0 comments:
Post a Comment