s26
நேற்று (09) அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சுமார் 150 வருட கால பழைமைமிக்க ஆலயமே இவ்வாறு விஷமிகளால் உடைக்கப்பட்டுள்ளது.
ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் காளியம்மன், அப்பகுதி பெருந்தோட்ட மக்களின்
குல தெய்வமாக இருந்து வந்ததென்று ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
இன முறுகலை ஏற்படுத்தும் வகையிலேயே இச்சிலை விஷமிகளினால் அடித்து நொருக்கப்பட்டிருப்பது ஆரம்ப விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
மாகாண பிரதி பொலிஸ் அதிபருடன் தொடர்பு கொண்ட அரசியல்வாதிகள், சிலை
உடைப்பில் சம்பந்தப்பட்ட விவகாரம் தொடர்பாக உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டு
சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு கேட்டுக்
கொண்டுள்ளனர்.
உடைத்து நொறுக்கப்பட்ட சிலைக்கு பதிலாக பிறிதொரு சிலையினைப் பெற்றுக்
கொடுக்கவும், அவ் ஆலயத்தையே புனர்நிருமாணம் செய்யவும் மாகாண அமைச்சர்
செந்தில் தொண்டமான் உறுதியளித்துள்ளார்.
எனினும் சிலை உடைப்பு தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.
சம்பவம் தொடர்பாக ஜனாதிபதி இணைப்புச் செயலாளர் வடிவேல் சுரேஸும் சம்பவ இடத்திற்குச் சென்று தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
இலங்கையில் முஸ்லிம் பள்ளிகள், கிஸ்தவ தேவாலயங்கள் உடைக்கப்பட்டு இனவாதம்
தூண்டிவிடப்பட்ட நிலையில் தற்போது இந்து ஆலயங்களை விஷமிகள் குறி
வைத்துள்ளனர்.
மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கொழும்பு, அவிசாவளை, பதுளை என இந்து ஆலயங்கள் உடைக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
ஆனால் இவை குறித்து எவரும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ளதாக இதுவரை அறியக்கிடைக்கவில்லை.





Time in Colombo
0 comments:
Post a Comment