2015/01/15,05:20GMT
சீனாவில் உடல் எடை குறைவால் அவதிப்பட்ட சிறுமியின் வயிற்றிலிருந்து மருத்துவர்கள் 1/2 கிலோ தலைமுடியை எடுத்துள்ளனர்.
சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள லுயோயங் பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி கடந்த ஒரு வருட காலமாக தலை முடி மற்றும் உடல் எடை குறைவால் அவதிப்பட்டுவந்தார்.
சிறுமி தொடர்ந்து வயிற்று வலியால் துடித்ததால், அவரது தாய் அவரை மருத்துவரிடம் அழைத்து சென்றுள்ளார். அப்போது சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது வயிற்றில் 70 சதவீதம் தலைமுடியால் அடைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.
சிறுமியின் வயிற்றில் 30 செ.மீ அளவில் தலைமுடி கொத்தாக இருந்தது. இந்த தலைமுடி சிறுமியின் வயிறு போல வடிவத்தில் உறுதியாக இருந்ததாக மருத்துவர் சென் யே தெரிவித்துள்ளார்.
தனது மகளின் வயிற்றிலிருந்து 1/2 கிலோ தலைமுடி வெளியேற்றப்பட்டபின் பேசிய சிறுமியின் தாய், நான் பலமுறை எனது மகள் வாயில் முடி வைத்திருப்பதை பார்த்துள்ளேன், ஆனால், அவள் விளையாடுவதாக நான் எண்ணினேன் என கூறினார்.

Time in Colombo
0 comments:
Post a Comment