ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் இரண்டு
நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள மாலைத்தீவு
ஜனாதிபதி அப்துல்லா யமீனுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குமிடையில்
இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
ஜனாதிபதி செயலகத்துக்கு வருகை தந்த
மாலைத்தீவு ஜனாதிபதி மற்றும் அவரது பாரியார் பாத்திமா இப்றாஹீம் ஆகியோரை
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோர் வரவேற்றனர்.
செங்கம்பள வரவேற்பும் இராணுவ அணிவகுப்பு மரியாதையும் அவர்களுக்கு
வழங்கப்பட்டது. சிறுவர்கள் கொடியசைத்து வரவேற்றனர்.
இருதரப்பு பேச்சுக்கள் ஆரம்பிக்க முன்னர் சிரேஷ்ட அமைச்சர்கள் மாலைதீவு ஜனாதிபதிக்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்டனர்.






Time in Colombo
0 comments:
Post a Comment