மின்சார சபையின் சுன்னாகம் மற்றும் தீவக சிறு மின் உற்பத்தி நிலைய தற்காலிகப் பணியாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சரின் செயலகத்தில் நேற்று (10) இந்த சந்திப்பு நடைபெற்றது.
இதன்போது தற்காலிக பணியாளர்கள் தமது நிரந்தர நியமனம் தொடர்பாக அமைச்சர் அவர்களுக்கு கோரிக்கை விடுத்தனர். கோரிக்கையினை ஆராய்ந்த அமைச்சர் அவர்கள் துறைசார்ந்தோருடன் இதுவிடயம் தொடர்பில் கலந்துரையாடி உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவித்தார்.
இச்சந்திப்பின் போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.வி குகேந்திரன் உடனிருந்தார்.





Time in Colombo
0 comments:
Post a Comment