வெங்கட்பிரபு இயக்கத்தில்
சூர்யா நடிக்கயிருக்கும் புதிய படத்துக்கு கல்யாணராமன் என்ற பெயர் தேர்வு
செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
லிங்குசாமி
இயக்கத்தில் நடித்து வரும் படம் முடிந்ததும் வெங்கட்பிரபுவின் படத்தில்
சூர்யா நடிக்கிறார். ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் படத்தை தயாரிக்கிறது.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். காஸ்ட்யூம் டிஸைனிங் வாசுகி பாஸ்கர்.
சக்தி சரவணன் ஒளிப்பதிவு.
ஒன்
லைனை சூர்யாவிடம் கூறி அவரின் சம்மதத்தை பெற்றிருக்கிறார் வெங்கட்பிரபு.
இதில் சூர்யாவுக்கு இரண்டு வேடங்களாம். நகைச்சுவை கலந்த ஆக்ஷனில் படம்
தயாராக உள்ளது.
படத்துக்கு கல்யாணராமன் என்ற பெயரை வெங்கட்பிரபு தேர்வு செய்திருப்பதாகவும், சூர்யாவுக்கு பெயர் பிடித்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கல்யாணராமன் கமல், ஸ்ரீதேவி நடிப்பில் 1979 ல் வெளியான படம். கமலுக்கு இதில் இரண்டு வேடங்கள். அன்றைய கல்யாணராமன் மிகப்பெரிய வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Time in Colombo
0 comments:
Post a Comment