2014/01/10,12:10GMTwww.yarlvidiyal.com
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று காலை ஜெரூசலம் நகரத்திலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இஸ்ரேலிய ஜனாதிபதி ஷிமோன் பெரெஸை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இச்சந்திப்பின் போது ஜனாதிபதியின் தலைமைத்துவத்தை பெரிதும் பாராட்டிய இஸ்ரேலிய ஜனாதிபதி'ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் இலங்கை பெற்றுக்கொண்டுள்ள நன்மைகள் கவர்ச்சிகரமான சாதனைகளாகும்'என்றும் 30 ஆண்டுகால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து அபிவிருத்தியையும் ஐக்கியத்தையும் மோலேhங்கச்செய்துள்ள ஜனாதிபதியின் செயற்பாட்டினை இஸ்ரேலிய ஜனாதிபதி பெரிதும் பாராட்டினார்.
செல்வாக்கான வரலாறு மற்றும் மிகவும் புத்தி கூர்மையுள்ள மக்கள் இலங்கையில் இருப்பதாகவும் இஸ்ரேலிய ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
2004 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் போது இஸ்ரேல் அரசு வழங்கிய உதவிகளுக்கு ஜனாதிபதி இதன் போது நன்றி தெரிவித்தார்.
இஸ்ரேல் -பலஸ்தீன் மோதலுக்கு தீர்வாக இரு நாடுகளிலும் வேறு ஆட்சிகளை அமைப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் சிபார்சுக்கு தாம் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்
இதனையடுத்து, இலங்கையில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் இஸ்ரேல் வர்த்தக பிரமுகர்களையும் ஜனாதிபதி சந்தித்தார். இரு நாடுகளுக்கிடையில் வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்துவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.அடுத்து ஜரூசலம் வனவியல் பூங்காவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி தனது விஜயத்தின் ஞாபகர்த்தமாக ஒலிவ் மரக்கன்று ஒன்றையும் நாட்டி வைத்தார்.
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அமைச்சின் மேற்பார்வை எம்பி சஜித் வாஸ் குணவர்த்தன, பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, இஸ்ரேல் நாட்டுக்கான இலங்கை தூதுவர் சரத் டி விஜேசிங்க ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.www.yarlvidiyal.com




.jpg)
Time in Colombo
0 comments:
Post a Comment