கடந்த ஞாயிற்றுக்கிழமை தமண பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து இறக்காமம் பிரதேசத்தில் வைத்து 5 கிராம் கஞ்சா போதைப் பொருளுடன் 60 வயதுடைய முதியவர் ஒருவரை கைது செய்து நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பொலிஸார் உத்தரவிட்டு பிணையில் விடுவித்தனர்.
குறித்த நபர் அம்பாறை நீதிவான் நீதிமன்றத்தில் நீதிபதி செல்வி எம்.எஸ்.பிரிங்கி முன்னிலையில் ஆஜரான போது இவருக்கு 10 ஆயிரம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.
0 comments:
Post a Comment