ஞாயிற்றுக்கிழமை, 22 டிசெம்பர் 2013,9:10am
ஈராக்கில் ஷியா பிரிவு ஆட்சியாளர் நூரி அல் மாலிக்கிக்கு எதிராக சன்னி
பிரிவு போராளிகள் சண்டையிட்டு வருகின்றனர். கடந்த 2008-ம் ஆண்டு முதல்
நடந்துவரும் இச்சண்டை பிரிவினைவாத சண்டையாக தீவிரமடைந்துள்ளது. அல் கொய்தாவுடன் தொடர்புடைய இந்த சன்னி போராளிகளை ஒடுக்கும் நடவடிக்கைகளை அன்பர் மாகாணத்தில் ராணுவத்தினர் மேற்கொண்டனர். அப்போது அவர்கள் திட்டமிட்டுக்கொண்டிருந்த கட்டிடவளாகத்தில் குண்டு ஒன்று வெடித்தது. இதில் ஈராக் கமாண்டர் ஒருவர் உள்பட 15 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
இது தற்கொலைப்படை தாக்குதலால் நடந்ததா அல்லது ரகசியமாக பதுக்கிவைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததால் ஏற்பட்டதாக என்று சரியாக தெரியவில்லை. பாக்தாத் வடக்கே ஷ்ர்கத் என்னுமிடத்தில் குண்டு வெடித்து 5 போலீசார் கொல்லப்பட்டனர். பலுஜா நகரில் நடந்த துப்பாக்கி சூட்டிலும் 4 பேர் கொல்லப்பட்டனர்.





Time in Colombo
0 comments:
Post a Comment