ஞாயிற்றுக்கிழமை, 22 டிசெம்பர் 2013,9:18am
பூமிக்கு மேலே 400 கிலோ மீட்டர் தூரத்தில் செயல்பட்டு வரும் சர்வதேச
விண்வெளி நிலையத்தின் குளிர்ச்சியூட்டும் குழாயில் உடைப்பு
ஏற்பட்டிருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதை உடனடியாக
சரிசெய்வதற்கான முயற்சியில் அங்குள்ள விண்வெளி வீரர்கள் இறங்கினர். மூன்று முறையாக விண்ணில் மிதந்தவாறு இப்பணியை அவர்கள் செய்யவுள்ளனர். இதற்காக இரு அமெரிக்க விண்வெளிவீரர்கள் நேற்று நிலையத்தை விட்டு வெளியே வந்து மிதந்தவாறு உடைப்பை சரிசெய்யும் பணியை மேற்கொண்டனர்.
முதல் முறையாக ஒரு குளிர்சாதனப்பெட்டி அளவுள்ள இந்த செயலிழந்த அம்மோனியம் குழாயின் இணைப்பை துண்டிப்பதற்கு அவர்களுக்கு ஆறரை மணி நேரம் தேவைபட்டது. இந்தநடவடிக்கையை ஜப்பான் விண்வெளி வீரர் கோய்ச்சி வாகடா மேற்பார்வையிடுகிறார்.
திங்களன்று நடைபெறும் இரண்டாம் கட்டப்பபணியின் போது, இந்த அம்மோனியா குழாயை அவர்கள் அகற்றுவார்கள்.
கிறிஸ்துமஸ் நாளான 25-ம் தேதியன்று சர்வதேச விண்வெளியில் வைக்கப்பட்டுள்ள மாற்று அம்மோனிய குழாயை அப்பகுதியில் அவர்கள் பொருத்துவார்கள்.




Time in Colombo
0 comments:
Post a Comment