ஞாயிற்றுக்கிழமை,
22 டிசெம்பர்
2013,9:23am
இந்நிலையில், ராஜமௌலி இயக்கத்தில் தெலுங்கு, தமிழ் ஆகிய இருமொழிகளில் உருவாகி வரும் ‘மகாபலி’ என்ற படத்தில் நடிக்க தமன்னா ஒப்பந்தமாகியுள்ளார். சரித்திர கதையை மையமாக கொண்டு இயக்கப்பட்டு வரும் இந்த படத்தில் பிரபாஸ், அனுஷ்கா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அவந்திகா என்ற கதாபாத்திரத்தில் நடிக்க தமன்னா ஒப்பந்தமாகியுள்ளார். இன்று பிறந்தநாளை கொண்டாடும் தமன்னாவிற்கு இந்த செய்தி சந்தோஷத்தை கொடுத்துள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக தற்போது ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு ஒத்திகைகள் நடந்து வருகிறது. வரும் 23-ந் தேதி முதல் அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை இதே பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடத்த உள்ளனர்.





Time in Colombo
0 comments:
Post a Comment