[ சனிக்கிழமை,
14 டிசெம்பர் 2013,10:34am]
ஆளுநராகப் பதவியேற்று 4 வருடங்களின்
பின்னர் தனக்குள்ள
அதிகாரங்கள் தொடர்பில், வடக்கு மாகாண அரச
அதிகாரிகளுக்கு விளக்கமளித்துள்ளார் வடக்கு
மாகாண ஆளுநரும்
முன்னாள் இராணுவ
அதிகாரியுமான ஜி.ஏ.சந்திரசிறி.
வடக்கு
மாகாண சபை
மக்களால் தெரிவு
செய்யப்பட்டு, அதன் முதலாவது வரவு -செலவுத்
திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள
நிலையில்,
ஆளுநரால்
அவசர அவசரமாக
விடுக்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய, நேற்று வடக்கு
மாகாண சபை
அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தினார் வடக்கு
ஆளுநர்.
கோப்பாய்
தேசிய கல்வியற்
கல்லூரியில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில், மத்திய அரசுக்குட்பட்ட யாழ்ப்பாணம் மற்றும்
முல்லைத்தீவு அரச அதிபர்கள், வடக்கு மாகாண
சபையின் அமைச்சுக்களின்
செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் ஆகியோர் கலந்து
கொண்டனர்.
13ஆவது
திருத்தச் சட்டம்
மற்றும் மாகாண
சபைச் சட்டங்கள்
ஊடாக ஆளுநருக்கு
வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் தொடர்பில் ஆளுநராகப் பதவியேற்று
4 வருடங்களின் பின்னர் நேற்று அதிகாரிகளுக்கு விளக்கமளித்தார்
ஆளுநர் சந்திரசிறி.
மக்களால்
தேர்ந்தெடுக்கப்பட்ட வடக்கு மாகாணசபைக்குரிய
அதிகாரங்கள் தொடர்பிலோ வடக்கு முதலமைச்சருக்குரிய அதிகாரங்கள் தொடர்பிலோ அவர் எதுவும்
தெரிவிக்கவில்லை.
இதேவேளை
இந்தக் கலந்துரையாடலின்
கேள்வி நேரத்தின்போது
தலா இரண்டு
தமிழ் பேசும்
அதிகாரிகளும், சிங்கள அதிகாரிகளும் மட்டுமே கேள்வி
கேட்டனர் என்று
தெரிவிக்கப்படுகிறது.





Time in Colombo
0 comments:
Post a Comment