அனைத்துலக சமூகத்தினால் அழுத்தம்
கொடுக்கப்பட்டு வரும்- போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்களுக்குப்
பொறுப்புக்கூறுவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, ஐ. நா மனிதஉரிமைகள் பேரவைக்கு
சிறிலங்கா அரசாங்கம் விளக்கமளிக்கவுள்ளது.
சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க
இதற்காக அடுத்தமாதம்
ஜெனிவா செல்லவுள்ளார்.
இதுகுறித்து, சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட ஜப்பானிய
சிறப்புத் தூதுவர் யசூசி அகாசியிடம், சிறிலங்கா
அதிபர் மகிந்த
ராஜபக்ச உறுதியளித்துள்ளார்.
வரும், மார்ச்
மாதம் நடக்கவுள்ள
ஐ.நா
மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடருக்கு
முன்னதாக, சிறிலங்கா அதிபரின் செயலர் லலித்
வீரதுங்க ஜெனிவா சென்று சிறிலங்கா அரசின்
தரப்பில் விளக்கங்களை அளிக்கவுள்ளார்.
போர்க்குற்றங்கள் தொடர்பாக சுதந்திரமான
விசாரணைகளை நடத்த அழுத்தம் கொடுத்து வரும்
அனைத்துலக சமூகத்தை சமாளிக்கும் ஒரு நகர்வாகவே
இவரது இந்தப்
பயணம் இடம்பெறவுள்ளது.
ஜப்பானிய சிறப்புத் தூதுவர் யசூசி அகாசியே,
லலித் வீரதுங்கவை
ஜெனிவாவுக்கு அனுப்புமாறு சிறிலங்கா அதிபரிடம் கேட்டுக்
கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
|
0 comments:
Post a Comment