தென்னாபிரிக்க
முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவுக்கு அஞ்சலி செலுத்தும், அரசு நிகழ்வு
நேற்று தென்னாபிரிக்காவின் ஜொகனஸ்பேர்க் நகரில் இடம்பெற்றது.
இலட்சக்கணக்கான
மக்களும், 90 நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளும் ஒன்று கூடிய
இந்த இறுதிஅஞ்சலி நிகழ்வு, அண்மைக்காலத்தில் உலகின் மிகப்பெரிய இறுதி
அஞ்சலி நிகழ்வாக அமைந்தது.
ஜொகனஸ்பேர்க் எவ்என்பி விளையாட்டரங்கில்
கொட்டுமு மழைக்கு நடுவே, நடந்த அஞ்சலி நிகழ்வில், உலகத் தலைவர்களும்,
ஆயிரக்கணக்கான மக்களும் பங்கேற்றனர்.
ஜொகனஸ்பேர்க் நகரில் உள்ள
ஏனைய மூன்று பாரிய விளையாட்டரங்குகளில் கூடியிருந்த மக்களுக்கு பெரிய
தொலைக்காட்சித் திரைகளில் அதைக் காணும் வாய்ப்பு ஏற்படுத்திக்
கொடுக்கப்பட்டிருந்தது.
இறுதி நிகழ்வில், ஐ.நா பொதுச்செயலர் பான்
கீ மூன், அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப்
முகர்ஜி, சீன துணை அதிபர், பிறேசில் அதிபர், கியூப அதிபர், நமீபிய அதிபர்,
போன்றோரும் உரையாற்றினர்.
இந்த நிகழ்வில், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவும் கலந்து கொண்டிருந்தார்.
இந்த நிகழ்வில் நெல்சன் மண்டேலாவின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கவில்லை.
அவரது உடல், பிரிட்டோரியாவில் உள்ள யூனியன் மண்டபத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
நெல்சன்
மண்டேலாவின் இறுதி நிகழ்வுகளில் ஏராளமான பொதுமக்களும், உலகத் தலைவர்களும்
பங்கேற்பதால், பாதுகாப்புக் கருதி அரசுமுறையிலான இறுதி நிகழ்வு நேற்று
ஜொகனஸ்பேர்க்கில் ஒழுங்கு செய்யப்பட்டது.
அவரது இறுதிச் சடங்கு வரும், 15ம் நாள் சொந்தக் கிராமத்தில் நடைபெறவுள்ளது. |
0 comments:
Post a Comment