வடக்கு மாகாணசபையின் முதலாவது வரவுசெலவுத் திட்டம் நேற்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
2014ம்
ஆண்டுக்கான வடக்கு மாகாணசபையின் வரவு செலவுத் திட்டத்தை முதல்வர்
சி.வி.விக்னேஸ்வரன் நேற்று மாகாணசபை அமர்வில் சமர்ப்பித்தார்.
இதையடுத்து
முதலமைச்சரின் கீழ் உள்ள 17 அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்பட்ட, மீண்டெழும்
செலவினங்களுக்கான 1632.63 மில்லியன் ரூபா, மற்றும் மூலதனச்
செலவினங்களுக்கான 199.5 மில்லியன் ரூபா, ஒதுக்கீடுகளுக்கு சபை அங்கீகாரம்
அளித்தது.
கல்வி கலாசார, விளையாட்டுத்துறை, இளைஞர் விவகார
அமைச்சின் மீண்டெழும் செலவினத்துக்கு 6424.33 மில்லியன் ரூபாவும்,
மூலதனச்செலவுக்கு 583.5 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
சுகாதார,
சுதேச மருத்துவத்துறை அமைச்சுக்கு, 3532.95 மில்லியன் ரூபா மீண்டெழும்
செலவுக்கும், 422.8 மில்லியன் ரூபா மூலதனச் செலவுக்கும்
ஒதுக்கப்பட்டுள்ளது.
கடற்றொழில், போக்குவரத்து, கிராமிய
அபிவிருத்தி அமைச்சுக்கு, மீண்டெழும் செலவினத்துக்கு 122.49 மில்லியன்
ரூபாவும், 60.4 மில்லியன் ரூபா மூலதனச்செலவுக்கும் ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது.
விவசாய, கால்நடை, நீர்ப்பாசன, சுற்றாடல்துறை
அமைச்சின் மீண்டெழும் செலவினத்துக்கு 581.98 மில்லியன் ரூபாவும்,
மூலதனச்செலவினத்துக்கு 125.5 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. |
0 comments:
Post a Comment