புதன், 11 டிசம்பர் 2013( 15:50PA. S26டெல்லியில்
ஆட்சி அமைக்க பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் மறுப்பதால் மறுதேர்தல்
ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. டெல்லியில் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள்
வெளியாகி 3 நாட்கள் மேலாகியும் கூட அங்கு ஆட்சி அமைப்பது யார் என்பது
இன்னும் இழுபரி நீடிக்கிறது.பாஜக அல்லது காங்கிரசிடமிருந்து ஆதரவு கோரவோ அல்லது ஆதரவு அளிக்கவோ போவதில்லை என்று ஆம் ஆத்மி கட்சி திட்டவட்டமாக கூறியுள்ளது. அதேபோல் ஆட்சி அமைக்க இயலாததால் மக்களை மீண்டும் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பாரதிய ஜனதா கூறியுள்ளது. தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருக்கும் படி கட்சியினரை பாஜக கேட்டுக்கொண்டுள்ளது. அதேபோல ஆட்சி அமைக்க ஆம் ஆத்மி கட்சிக்கு முதலில் ஆதரவு தருவதாக கூறிய காங்கிரஸ் பின்னர் ஆதரவு தர முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. பாஜகவும், ஆம் ஆத்மி கட்சியும் சேர்ந்து ஆட்சி அமைத்து மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என அக்கட்சி கூறியுள்ளது.
இதனிடையே ஆட்சி அமைக்க யாரை அழைப்பது என்பது குறித்து துணை நிலை ஆளுநர் நஜிப்ஜங் சட்ட ஆலோசர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். ஆட்சி அமைக்க இரு கட்சிகளும் விருப்பம் தெரிவிக்காவிட்டால் குடியரசு தலைவர் ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரை செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.





Time in Colombo
0 comments:
Post a Comment