எதிர்கால
அரசியல் போராட்டம் குறித்து முடிவு செய்வதற்காக தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின் நாடாளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்களுக்கான முக்கிய
கூட்டம் வரும் செவ்வாய்கிழமை வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
நேற்று
நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திலேயே இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
வவுனிய
நகர சபை மண்டபத்தில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் தமிழ்த்தேசியக்
கூட்டமைப்பின் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் வடக்கு முதலமைச்சர்
உள்ளிட்ட 30 வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள், எதிர்க்கட்சித் தலைவர்
உள்ளிட்ட 11 கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து
கொள்ளவுள்ளனர்.
அதேவேளை, இன்று மாலை நடக்கவுள்ள வரவுசெலவு
திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பில் அதற்கு எதிராக வாக்களிப்பது என்றும்
நேற்றுமாலை நடந்த கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு
செய்துள்ளது. |
0 comments:
Post a Comment