வியாழக்கிழமை, 19 டிசெம்பர் 2013,10:48pm
இம்மாத இறுதியில் கலைக்கப்படவுள்ள தென் மாகாண சபைக்காக ஐக்கிய தேசியக்
கட்சியிலிருந்து காலி மாவட்டத்திற்கு பிரபல நடிகை நதீஷா ஹேமமாலி
போட்டியிடவுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன.
அதற்கான விண்ணப்ப்ப்படிவத்தை இன்று பகல் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் அக்கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவிடம்
கையளித்துள்ளார்.
காலி மாவட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட நதீஷாவுக்கு அம்பலங்கொட அல்லது
ரத்கம தொகுதியின் அமைப்பாளர் பதவி வழங்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி
முடிவெடுத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
பிரபல நடிகையான நதீஷா சிறந்த வாயாடியுமாவார். அவர் ஒருமுறை “விபச்சாரிகள்
இல்லாவிட்டால் ஆண்களுக்குப் பைத்தியம் பிடிக்கும்” என்று
குறிப்பிட்டதிலிருந்து அவர் மேலும் பேசப்படுகின்றார் என்பது
குறிப்பிடத்தக்கது.




Time in Colombo
0 comments:
Post a Comment