இலங்கையின்
தேசிய கீதமானது தமிழ் மொழியில் இசைக்கப்பட வேண்டும் எனவும் வடக்கில் தேசிய
கீதமானது தமிழ் மொழியில் இசைக்கப்பட முடியாவிட்டால் இதனை சிங்களத்தில்
பாடுவதிலும் எவ்வித அர்த்தமும் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின
நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழர் வாழும்
பிரதேசங்களில் தேசிய கீதமானது தமிழில் இசைக்கப்படுவதற்கு அனுமதி
மறுக்கப்பட்டால் இதனை இசைக்க வேண்டிய தேவையில்லை எனவும் வடக்கில் வாழும்
மக்கள் தேசிய கீதத்தை சிங்கள மொழியில் பாடவேண்டிய தேவையில்லை எனவும்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான
பி.அரியநேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
வட கிழக்குப் பகுதிகளில்
உள்ள தமிழ் பாடசாலைகள், கலாச்சார நிகழ்வுகள் அல்லது இலங்கையின் அமைச்சர்கள்
வரும்போது தேசிய கீதத்தை சிங்களத்தில் பாடும்படி பணிக்கப்படுகிறார்கள்
என்றும் அரியநேத்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
23 அமைச்சுக்கள்
மற்றும் சிறப்புச் செயற்பாடுகளுக்கான செயலகத்தின் கீழ் 2014க்கான வரவு
செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு இடம்பெற்ற போது அதில் கலந்து கொண்ட
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு
தெரிவித்துள்ளனர்.
"சிறிலங்கா ஒரு இந்து மத நாடாகும். இராவணன் இந்த
நாட்டை ஆண்டிருந்தார். இராவணன் இந்து மதத்தைச் சேர்ந்தவர். இந்த உண்மைகளை
மகாவம்சம் உறுதிப்படுத்துகிறது. ஆகவே இந்துக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட
வேண்டும். இராவணன் சிவன் கடவுளை வழிபட்ட ஒரு அரசன் ஆவார்" என தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான நாடாளுமன்ற உறுப்பினர்
யோகேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு
முன்னர் வடமாகாண சபையின் அமைச்சர் ஐங்கரநேசன் மன்னாரில் நடைபெற்ற ஒரு
நிகழ்வில் தேசியக் கொடியை ஏற்ற மறுத்திருந்தார் என்பதும்
குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment