s26
மர்ம நபர்களால் பசை தடவி வைக்கபட்டிருந்த கழிவறையை உபயோகப்படுத்த சென்ற 40 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஜார்ஜியாவின் ஒரு பிரபல பல்பொருள் அங்காடியில் இருந்த கழிவறையில் மர்ம நபர்கள் பசையை ஒட்டவைத்துள்ளனர். இந்நிலையில் அந்த கடைக்கு சென்ற ஒரு பெண் அந்தக் கழிவறைக்குச் சென்றுள்ளார்.கழிவறையை உபயோகப்படுத்திய அப்பெண், அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்தபோதுதான், அங்கு பசை ஒட்டப்பட்டிருந்ததை அறிந்தார். உடனடியாக உதவிக்காக அழைத்த அப்பெண்ணை மீட்க 25 நிமிடங்கள் கழித்துதான் முயற்சிகள் மேற்கொள்ளபட்டதாக தெரிகிறது.
கழிவறையில் பெண் ஒருவர் சிக்கிக் கொண்ட தகவலறிந்த அங்காடி நிர்வாகம், உடனடியாக மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மருத்துவர்கள், கஷ்டப் பட்டு அப்பெண்ணை மீட்டனர்.
கழிவறைகளில் அங்காடி நிர்வாகத்தினர் நடத்திய சோதனையில், அங்குள்ள ஒரு கழிவறையின் ஓரத்தில் பசைப்பை ஒன்று கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அங்கிருந்த மற்ற கழிவறைகளிலும் பசை ஒட்டபட்டிருந்தது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து, இச்செயலில் ஈடுபட்ட நபர்கள் குறித்து போலீசில் புகார் அளிக்கப் பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.





Time in Colombo
0 comments:
Post a Comment