S26 .2013.12.10 சிவகார்த்திகேயன், ஹன்ஷிகா ஜோடியாக நடித்துவரும் ‘மான்கராத்தே’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் கதை, திரைக்கதையை எழுத, அவரது சிஷ்யரான திருக்குமரன் இந்தப்படத்தை இயக்குகிறார்.
இந்தப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை படமாக்குவதற்காக மிகப்பெரிய அரங்கம் ஒன்றை அமைத்துள்ளார் கலை இயக்குனர் ராஜா முருகன்.
எதிர்நீச்சல் மூலம் சிவகார்த்திகேயனுக்கு சூப்பர்ஹிட் பாடல்களை தந்த அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
நாசர், ‘துப்பாக்கி’ வில்லன் வித்யுத் ஜாம்வாலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.
எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஏ.ஆர்.முருகாதஸும் இப்படத்தினை தயாரிக்கிறார்.




Time in Colombo
0 comments:
Post a Comment