s26 .2013.12.10
அனைத்துலக மனிதஉரிமைகள் நாளான இன்று திருகோணமலை பேருந்து நிலையத்தில், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த, காணாமற்போனோரின் உறவினர்கள் மீது, முகமூடி அணிந்து வந்த நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அனைத்துலக மனிதஉரிமைகள் நாளான இன்று, திருகோணமலை பேருந்து நிலையத்தில் காணாமற்போனோரைத் தேடியறியும் குழுவை சேர்ந்தவர்கள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை நடத்தினர்.
இதன்போது அங்கு முகத்தை மூடி மறைத்தவாறு வந்த சிலர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதுடன், அவர்களையும் தாக்கினர்.
இதன்போது, காணாமற்போனோரின் உறவினர்கள் வைத்திருந்த பதாகைகளும் கிழித்தெறியப்பட்டன.
இந்தத் தாக்குதலில் மூதூர் பிரதேச சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் திருச்செல்வம், காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, திருகோணமலை பேருந்து நிலையப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.




Time in Colombo
0 comments:
Post a Comment