இன்று நடைபெறும் நெல்சன்
மண்டேலாவின் இறுதிச்சடங்கில் பங்கேற்க, தமிழர்கள் சார்பில்
பிரித்தானிய தமிழர் பேரவைக்கு தென்னாபிரிக்கா அதிகாரபூர்வமாக
அழைப்பு விடுத்துள்ளது.
கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
மறைந்த தென்னாபிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் இறுதிச்சடங்கு, இன்று அவரது சொந்த கிராமமான குணுவில் நடக்கவுள்ளது.
கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
மறைந்த தென்னாபிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் இறுதிச்சடங்கு, இன்று அவரது சொந்த கிராமமான குணுவில் நடக்கவுள்ளது.
இந்தநிலையில், நெல்சன் மண்டேலாவின் மறைவு தொடர்பாக பிரித்தானிய தமிழர் பேரவை, ஆளும் ஆபிரிக்கத் தேசிய காங்கிரசுடன் பேச்சு நடத்தியுள்ளது.
அத்துடன், தமிழர்களின் சார்பில் இன்று நடக்கவுள்ள நெல்சன் மண்டேலாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளுமாறும் பிரித்தானிய தமிழர் பேரவைக்கு தென்னாபிரிக்கா அதிகாரபூர்வ அழைப்பை விடுத்துள்ளது.
பிரித்தானிய தமிழர் பேரவையின் பணிப்பாளரும் பேச்சாளருமான சுரேன் சுரேந்திராவுக்கும் தென்னாபிரிக்காவின் பிரதி அமைச்சர் ஒபெட் பொபேலாவுக்கும் இடையில் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.
ஒபெட் பொபேலா, ஆபிரிக்க தேசிய காங்கிரசின் அனைத்துலக உறவுகளுக்கான பிரிவின் தலைவராகவும் இருப்பவர்.
கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்ற தென்னாபிரிக்க அதிபர் ஜேக்கப் சூமா தலைமையிலான குழுவில் இவரும் இடம்பெற்றிருந்தார்.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருடனான சந்திப்புகளிலும் ஒபெட் பொபேலா பங்கேற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தென்னாபிரிக்க அரசின் அதிகாரபூர்வ அழைப்பின் பேரில் நெல்சன் மண்டேலாவின் இறுதிச்சடங்கிளல் பங்கேற்க சுரேன் சுரேந்திரா பிரிட்டோரியா சென்றுள்ளார்.
அவர் நேற்று பிரிட்டோரியா வோட்டர்றூவ் விமான தளத்தில் நடந்த மண்டேலாவின் இறுதிச்சடங்கு நிகழ்வுகளில் பங்கேற்றார்.
அதையடுத்து, சொந்தக் கிராமமான குணுவுக்கு நெல்சன் மண்டேலாவின் உடல், எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.





Time in Colombo
0 comments:
Post a Comment