செவ்வாய், 7 ஜனவரி 2014,10:30pm
பாலாசூர்: அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் பிருத்வி2 ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள சந்திப்பூர் அருகே ராணுவ ஆராய்ச்சி கழகம், இன்று பிருத்வி2 ஏவுகணை சோதனை மேற்கொண்டது. பிருத்வி2 ஏவுகணை அணு ஆயுதங்களை சுமந்து சென்று, 350 கி.மீ. தூரத்தில் இலக்கை வலிமையுடையது. இந்திய ராணுவத்தின் வழக்கமான சோதனைகளில் ஒன்றான இந்த ஏவுகணை சோதனை, இன்று காலை நடத்தப்பட்டது.
இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் கூறியதாவது:
பிருத்வி2 ஏவுகணை 500 கிலோ முதல் 1000 கிலோ வரை அணு ஆயுதங்களை சுமந்து சென்று சுமார் 350 கிமீ தாண்டி சென்று இலக்கை தாக்கும் திறனுடையதாகும்.
ராணுவ பயிற்சியின் ஒரு பகுதியாக ஆயுத பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வகையில் பிருத்வி ஏவுகணை சோதனை மேற்கொள்ளப்பட்டது. இன்று காலை 9.48 மணிக்கு சந்திப்பூர் அருகே நடத்தப்பட்ட பிருத்வி 2 சோதனையில் அது வெற்றிகரமாக இலக்கை சென்று தாக்கியது.
இதில் மேலும் ஒரு முன்னேற்றமாக தற்போது ஏவப்பட்ட பிருத்வி ஏவுகணை கணினி தொழில்நுட்பம் மூலம் கப்பலில் இருந்தபடியே அதன் செல்லும் பாதை கண்காணிக்கப்பட்டது.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு முன்னதாக பிருத்வி2 ஏவுகணை சோதனை கடந்த டிசம்பர் மாதம் 3 தேதி வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Time in Colombo
0 comments:
Post a Comment