சனி, 25 ஜனவரி 2014
வடசென்னையில்
கள்ளக்காதலியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கள்ளக்காதலன் காதலி மீது
மண்ணெணெய் ஊற்றி கொளுத்தி விட, அவரோ கொளுத்தியவரையும் சேர்த்துக்
கட்டிப்பிடிக்க இருவருமே மரணமடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தண்டையார் பேட்டையில் முன்பு பிரகாஷ் என்ற ஒரு ரவுடி வளையவந்து கொண்டிருந்தார் அவருடைய மனைவிதான் தங்க மலர். இருவருக்கும் ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர்.
இந்த நிலையில் பிரகாஷ் சில மாதங்களுக்கு முன் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது மருத்துவமனையில் புகுந்து மர்ம கும்பல் ஒன்று அவரை படுகொலை செய்தது அப்போதைய செய்தித் தாள்களில் வந்தது. தங்கமலருக்கு வயது 33.
இந்த நிலையில் பிரகாஷ் இருந்தபோது அவருடைய நண்பர் ராஜா அடிக்கடி வீட்டுக்கு வருவதும் போவதுமாக இருக்க தங்கமலருக்கும், ராஜாவுக்கும் நெருக்கம் ஏற்பட்டது. பிரகாஷ் படுகொலை செய்யப்பட்ட பிறகு இந்த நட்பு கணவன் மனைவி போன்ற உறவாக வளர்ச்சியடைந்துள்ளது. இத்தனைக்கும் ராஜா திருமணமானவர். ஒரு மகனும் உள்ளார். ராஜாவுக்கு வயது 35.
இந்த நிலையில்தான் தங்கமலருக்கும் அதேபகுதியைச் சேர்ந்த இன்னொரு வாலிபருக்கும் நட்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது ராஜாவுக்கு தெரியவர தங்கமலரை கடுமையாக கண்டித்துள்ளார் இதனால் இருவருக்கும் சண்டை மூண்டுள்ளது. அடிக்கடி வாக்குவாதமும் நடந்துள்ளது.
வழக்கம் போல் நேற்று இரவும் தங்க மலர் வீட்டுக்கு ராஜா சென்றுள்ளார், மீண்டும் ராஜா கள்ள ஸ்னேகம் குறித்து கண்டிக்க தங்க மலர் எதிர்த்துப் பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜா தங்கமலர் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீயை பற்ற வைத்துள்ளார். ஆனால் தங்கமலர் விடாப்பிடியாக ராஜாவையும் சேர்த்துக் கட்டிப்பிடித்துக் கொள்ள இருவரது அலறல் சத்தமும் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து இருவரையும் ஆம்புலன்ஸில் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
அங்கு தீவிர சிகிச்சைப் பலனின்றி இரவு 9 மணியளவில் தங்கமலர் உயிரிழந்தார். நள்ளிரவு 1.30 மணியளவில் ராஜாவின் உயிரும் பிரிந்தது.
வடசென்னையில்
கள்ளக்காதலியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கள்ளக்காதலன் காதலி மீது
மண்ணெணெய் ஊற்றி கொளுத்தி விட, அவரோ கொளுத்தியவரையும் சேர்த்துக்
கட்டிப்பிடிக்க இருவருமே மரணமடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தண்டையார் பேட்டையில் முன்பு பிரகாஷ் என்ற ஒரு ரவுடி வளையவந்து கொண்டிருந்தார் அவருடைய மனைவிதான் தங்க மலர். இருவருக்கும் ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர்.
இந்த நிலையில் பிரகாஷ் சில மாதங்களுக்கு முன் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது மருத்துவமனையில் புகுந்து மர்ம கும்பல் ஒன்று அவரை படுகொலை செய்தது அப்போதைய செய்தித் தாள்களில் வந்தது. தங்கமலருக்கு வயது 33.
இந்த நிலையில் பிரகாஷ் இருந்தபோது அவருடைய நண்பர் ராஜா அடிக்கடி வீட்டுக்கு வருவதும் போவதுமாக இருக்க தங்கமலருக்கும், ராஜாவுக்கும் நெருக்கம் ஏற்பட்டது. பிரகாஷ் படுகொலை செய்யப்பட்ட பிறகு இந்த நட்பு கணவன் மனைவி போன்ற உறவாக வளர்ச்சியடைந்துள்ளது. இத்தனைக்கும் ராஜா திருமணமானவர். ஒரு மகனும் உள்ளார். ராஜாவுக்கு வயது 35.
இந்த நிலையில்தான் தங்கமலருக்கும் அதேபகுதியைச் சேர்ந்த இன்னொரு வாலிபருக்கும் நட்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது ராஜாவுக்கு தெரியவர தங்கமலரை கடுமையாக கண்டித்துள்ளார் இதனால் இருவருக்கும் சண்டை மூண்டுள்ளது. அடிக்கடி வாக்குவாதமும் நடந்துள்ளது.
வழக்கம் போல் நேற்று இரவும் தங்க மலர் வீட்டுக்கு ராஜா சென்றுள்ளார், மீண்டும் ராஜா கள்ள ஸ்னேகம் குறித்து கண்டிக்க தங்க மலர் எதிர்த்துப் பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜா தங்கமலர் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீயை பற்ற வைத்துள்ளார். ஆனால் தங்கமலர் விடாப்பிடியாக ராஜாவையும் சேர்த்துக் கட்டிப்பிடித்துக் கொள்ள இருவரது அலறல் சத்தமும் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து இருவரையும் ஆம்புலன்ஸில் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
அங்கு தீவிர சிகிச்சைப் பலனின்றி இரவு 9 மணியளவில் தங்கமலர் உயிரிழந்தார். நள்ளிரவு 1.30 மணியளவில் ராஜாவின் உயிரும் பிரிந்தது.

Time in Colombo
0 comments:
Post a Comment