சனி, 25 ஜனவரி 2014
இந்திரஜித் ராவணனின் மகன்.
சித்து வேலைகளில் கில்லாடி. ராமனுடனான இலங்கைப் போரில் இந்திரஜித் தனது
மறைந்து தாக்கும் மாய வித்தைகளால் ராமனின் படைக்கு கடும் சேதத்தை
விளைவித்தது புராணம். லக்ஷ்மணனை இரண்டு முறையும், ராமனை ஒருமுறையும் போரில்
தோற்கடித்த மாவீரன்.இறுதியில் விபீஷணனின் துணையுடன் மூன்று இரவுகளும் மூன்று பகல்களும் போர் புரிந்து இந்திரஜித்தை லக்ஷ்மணன் கொன்றான்.
அப்படிப்பட்ட அந்த மாய வீரனின் பெயரை தனது படத்தின் பெயராக்கியிருக்கிறார் கலாபிரபு. தாணுவின் மகன் என்றால் இன்னும் எளிதாக புரியும்.
கலாபிரபுவின் முதல் படம் சக்கரக்கட்டி கோடிகளை விழுங்கியதால் இயக்கத்தை பரணில் போட்டு சில காலம் வாளாவிருந்தார். இப்போது பவர்ஃபுல்லான பேண்டஸி கதையுடன் திரும்பி வந்திருக்கிறார். தாணுவும் துப்பாக்கியை தயாரித்து தெம்பாக இருக்கிறார். அப்புறமென்ன... படத்தை ஆரம்பிக்க வேண்டியதுதானே.
20 ஆம் தேதி தொடங்கிய படப்பிடிப்பு சென்னை இசிஆரில் நடந்தது. இரண்டாம் உலகம் மாதிரி இதுவொரு ஃபேண்டஸி கதை. கௌதம் கார்த்திக் ஹீரோ. தாணுவின் ஆளவந்தானுக்கு இசையமைத்த ஷங்கர்-எஹ்சான்-லாய் இசை. கவிஞர் அறிவுமதியின் மகன் இராசாமதி ஒளிப்பதிவு. எடிட்டிங் வி.டி.விஜயன், ஆக்ஷன் ஸ்டண்ட் சிவா என்று அருமையான டீம்.
புராண இந்திரஜித்தின் ஜாலத்தை இந்த நவீன இந்திரஜித் மறுஉருவாக்கம் செய்யுமா?





Time in Colombo
0 comments:
Post a Comment