9 ஜனவரி 2014
மேஷம்
ராசிக்குள்
சந்திரன் நுழைவதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். கணவன் -
மனைவிக்குள் ஈகோ பிரச்சனை வந்து நீங்கும். உங்கள் மீது சிலர் வீண்பழி
சுமத்துவார்கள். புது முதலீடுகளை தவிர்க்கவும். முன்கோபத்தால் பகை
உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம்
குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறங்கள் : வெள்ளை, நீலம்
ரிஷபம்
திட்டமிட்ட
காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகள்
எதிர்த்துப் பேசுவார்கள். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். உடல் அசதி,
சோர்வு வந்து நீங்கும். சகோதர வகையில் சங்கடங்கள் வரும். வியாபாரத்தில்
போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள்
வேண்டாமே.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறங்கள் : சில்வர் கிரே, மயில் நீலம்
மிதுனம்
இன்றையதினம்
புதுப்பொலிவுடன் காணப்படுவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோயம்
பிறக்கும். கடன் பிரச்சனை களுக்கு தீர்வு காண்பீர்கள். தாய்வழி
உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள். முன்கோபம் விலகும். வியாபாரத்தில் பழைய
பாக்கிகளை விரைந்து வசூலிப்பீர்கள். அரசுக் காரியங்களில் அனுகூலம் உண்டு.
வீடு, வாகனச் செலவுகள் குறையும். அக்கம் - பக்கம் வீட்டாரின் ஆதரவு
பெறுகும்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், மஞ்சள்
கடகம்
செயலில்
வேகத்தைக் காட்டுவீர்கள். வியாபார ரீதியாக சில பிரபலங்களைச்
சந்திப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின்
விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை
எடுப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள். மாணவர்களின்
நினைவாற்றல் கூடும். கன்னிப்பெண்கள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், ப்ரவுன்
சிம்மம்
முகமலர்ச்சியுடன்
காணப்படுவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும்.
பணப்பற்றாக்குறை நீங்கும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும்.
ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வாகனத்தை சீர்செய்வீர்கள்.
கன்னிப்பெண்களுக்கு பெற்றொரின் ஆதரவு கிட்டும். மாணவர்கள் உயர்கல்வியில்
கூடுதல் கவனம் செலுத்துவார்கள். வாகனவசதி பெருகும்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறங்கள் : வைலெட், இளஞ்சிவப்பு
கன்னி
சந்திராஷ்டமம்
தொடங்குவதால் வேலைச்சுமையால் உடல் அசதி, மனச் சோர்வு வந்து நீங்கும்.
குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும்.
சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். சிலரின் ஆசை
வார்த்தைகளில் ஏமாந்து விடாதீர்கள். கணுக்கால் வலிக்கும். வியாபாரத்தில்
ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது
நல்லது.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறங்கள் : க்ரீம் வெள்ளை, ப்ரவுன்
துலாம்
தன்னம்பிக்கை
துளிர்விடும். தைரியமான முடிவுகளை எடுப்பீர்கள். வெளியூர் பயணங்களால்
மகிழ்ச்சியுண்டு. வருங்காலத் திட்டங்களைப் பற்றி நண்பர்களிடம்
விவாதிப்பீர்கள். தாயாரின் உடல்நிலை சீராக இருக்கும். கண் எரிச்சல்,
தூக்கமின்மை விலகும். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்த நல்ல
சந்தர்ப்பங்கள் அமையும். வாழ்க்கைத் துணையின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், பிங்க்
விருச்சிகம்
இன்றையதினம்
திறம்பட செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள்
அன்யோன்யம் பிறக்கும். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். ஆன்மிகவாதிகளின்
சந்திப்பு நிகழும். வியாபாத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். அரசு
விஷயங்களில் அனுகூலமான நிலைக் காணப்படும். வெளிவட்டாரத்தொடர்பு
அதிகரிக்கும். முன்கோபம், வீண் டென்ஷன் விலகும்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறங்கள் : சில்வர் கிரே, ப்ரவுன்
தனுசு
இன்றையதினம்
நம்பிக்கைக்குறையவர்களின் சந்திப்பு நிகழும். குடும்பத்தில் அமைதி
நிலவும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உடன்பிறந்தவர்களின்
ஆதரவு கிட்டும். கையில் காசுபணம் தேவையான அளவு இருக்கும். உத்தியோகத்தில்
மேலதிகாரி, சகஊழியர்களின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் மகிழ்ச்சியுண்டு.
மாணவர்களின் எண்ணங்கள் பூர்த்தியாகும்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, பச்சை
மகரம்
புதுமுயற்சிகள்
வெற்றியடையும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். சொத்து
சம்பந்தப்பட்ட பிரச்சனை களுக்கு சுமுகமான தீர்வு கிடைக்கும். புண்ணிய
ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள்.
வெளிவட்டாரத்தொடர்பு அதிகரிக்கும். தலைச்சுற்றல், வயிற்றுவலி விலகும்.
கன்னிப்பெண்கள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். பணவரவு உண்டு.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறங்கள் : மெரூண், ப்ரவுன்
கும்பம்
எதார்த்தமாக
பேசி அனைவரையும் வியக்க வைப்பதுடன் தடைப்பட்ட காரியங்களையும் விரைந்து
முடிப்பீர்கள். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிள்ளைகளின்
பிடிவாதத்தை ரசிப்பீர்கள். விருந்தினர்கள், நண்பர்களின் வருகையுண்டு.
வெளியூர் பயணங்கள் திருப்திகரமாக அமையும். ஆன்மீகத்தில் ஈடுபாடு
அதிகரிக்கும். மாணவ, மாணவிகளின் நினைவுத்துறன் பெறுகும்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறங்கள் : மெரூண், ஆரஞ்சு
மீனம்
இன்றையதினம்
மனக்குழப்பங்கள் விலகி தெளிவு பிறக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல்
ஏற்படும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உடன்பிறந்தவர் களால்
உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் மகிழ்ச்சியுண்டு. பெற்றோரின் உடல் நிலை
சீராக இருக்கும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். அக்கம் - பக்கம்
வீட்டாரின் அன்புத் தொல்லைகள் விலகும்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறங்கள் : கிரே, மஞ்சள்




.jpg)
Time in Colombo
0 comments:
Post a Comment