2014/01/15,08:26GNT
இம்மாத இறுதியில் வெளிவிவகார அமைச்சர் ஜீ,எல். பீரிஸ் புதுடெல்லிக்கு விஜயம் செய்வார் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்துடன் மிக முக்கியமான சந்திப்பு ஒன்றை நடாத்துவார் எனவும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை- இந்திய மீனவர் பிரச்சினை குறித்து இலங்கை மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன இன்றுபுதன்கிழமை இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது..





Time in Colombo
0 comments:
Post a Comment