2014/01/16,11:30GMT
இந்த வருடத்தில் 20 ஆயிரம் கறவைப் பசுக்களை இறக்குமதி செய்ய நெதர்லாந்து வங்கியுடன் கடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இது தொடர்பாக இந்த வாரம் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்பட்டது.இந்த திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் 4500 பசு மாடுகளை தருவிக்க திட்டமிடப்பட்டதோடு முதலில் அவுஸ்திரேலியாவில் இருந்து 2000மாடுகள் கொண்டுவரப்பட்டன.
எஞ்சிய 2500 மாடுகளை தருவிக்க ஹம்பாந்தோட்டை ரிதியகம பண்ணையின் உட்கட்டமைப்பு வசதிகள் இந்த வருடத்திற்குள் மேம்படுத்தப்படவுள்ளது.
வரவு செலவுத் திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டவாறு இந்த வருடத்தில் 20 ஆயிரம் மாடுகள் இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.




Time in Colombo
0 comments:
Post a Comment