2014/01/16,11:50GMT
மீண்டும் விவசாய ஓய்வூதிய திட்டத்தில் 9,59,254 பேர் அங்கம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு வரவு-செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி பரிந்துரைத்த விவசாய ஓய்வூதிய திட்டத்தை விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையினூடாக முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்தில் விவசாய ஓய்வூதியம் பெறுவதற்கு 1,28,659 விவசாயிகள் தகுதி பெற்றுள்ளதோடு, இவர்களுக்கு 1500 ரூபாவுக்கும் 5 ஆயிரம் ரூபாவுக்கும் இடைப்பட்ட மாதாந்த ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
இவர்களில் ஜனவரி மாதம், 1,28,659 பேர் ஓய்வூதியம் பெற தகுதி பெற்று 64 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த வருடம் முதல் ஓய்வூதியம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
ஓய்வூதிய நிதியத்துக்கு ஆரம்பகட்டமாக ஆயிரம் மில்லியன் ரூபாவை அரசாங்கம் வழங்க உள்ளது.இது போன்ற தொகை 5 வருடங்களுக்கு தொடர்ந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.




.jpg)
Time in Colombo
0 comments:
Post a Comment