2014/01/03010:31pm
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசனின் கருத்துக்கள் சர்வதேச அரங்கில் ஏற்றுக்கொள்ளப்படாத கருத்தாகவே அமையும் என பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா நேற்று தெரிவித்துள்ளார்.
ராதிகா சிற்சபேசனின் இலங்கை விஜயம் குறித்து பிரதி வெளிவிவகார அமைச்சரிடம் கருத்துக் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் வாழ் தமிழர்களை திருப்திப்படுத்துவதற்காகவே ராதிகா சிற்சபேசன் இங்கு வந்து நடிக்கிறார். இலங்கை பற்றி ஒரு அறிக்கையை இவர் பகிரங்கப்படுத்தினால் அது நிச்சயமாக நாட்டுக்கு எதிரானதாகவே அமையும் என்பதனால் அத்தகைய ஒருதலைப்பட்சமான கருத்துக்கள் சர்வதேச அரங்கில் எடுபடாது என்றார். கனடாவில் உள்ள இலங்கைத் தமிழர்களின் வாக்குப் பலத்தின் மூலமே இந்தப் பெண்மணி கனடிய பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஆகவேதான் தமது வாக்காளர்களைத் திருப்தி செய்வதற்காக இவர் சுற்றுலா விஸாவில் இலங்கை வந்து இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடுகிறார். ராதிக சிற்சபேசன் இலங்கையில் விரும்பிய இடம் எல்லாம் சென்று பார்ப்பதற்கு அரசாங்கம் இடம் அளித்துள்ள போதிலும் இந்தப் பெண்மணி இனவாதப் போக்கில் செயற்படுவது வேதனை அளிக்கிறது. ராதிகா சிற்சபேசன் திறந்த மனதுடன் இந்த விஜயத்தை இலங்கைக்கு மேற்கொள்ளவில்லை. அவர் ஏதோ ஒரு குறிக்கோளை அடிப்டையாக வைத்தே இங்கு வந்து எங்கள் நாட்டின் குறைபாடுகளை கண்டுபிடிப்பதிலேயே ஆர்வம் காட்டுகிறார். எவ்வாறாயினும் இவர் இலங்கைக்கெதிராக கூறும் கருத்துக்கள் பக்கச்சார்புடையவை. ஆதலினால் இவை சர்வதேச அரங்கில் செல்லுபடியாகாது என பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா தெரிவித்தார்.

Time in Colombo
0 comments:
Post a Comment