வெள்ளி, 3 ஜனவரி 2014, 10:40pm
தென்னிந்திய படங்களின் ரீமேக்கில் நடிக்க தலைகீழாக நிற்கிறார்கள் ஹிந்தி நடிகர்கள். அதிலும் அஜய்தேவ் கான், அக்ஷய் குமார் போன்ற மசாலா ஹீரோக்களுக்கு தென்னிந்திய கரம் மசாலா அவசியம். இருவரையும் 2013 ல் தாங்கிப் பிடித்ததே நம்மூர் சினிமாக்கள்தான்.
ஒரு மாறுதலுக்கு ஹிந்தி படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய விரும்புகிறார் வெங்கடேஷ். படம் ஓ மை காட். அக்ஷய் குமார் தயாரிப்பில் பரேஷ் ராவல் நடித்த காமெடிப் படம். இதில் கிருஷ்ணராக கெஸ்ட் ரோலில் நடித்தார் அக்ஷய் குமார். படம் அவரின் பேங்க் பாலன்ஸை ஒரு தூக்கு தூக்கியது.
ஓ மை காட் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பரேஷ் ராவல் நடித்த வேடத்தில் வெங்கடேஷ் நடிக்க ஆசைப்படுகிறார். கிருஷ்ணர் வேடத்தை விக்ரம் போட்டால் படத்தை தமிழிலும் வெளியிடலாம்.
ஐ படத்துக்காக வெறும் பச்சை தாவரங்களை உண்டு தவம் கிடக்கும் விக்ரம் வெங்கடேஷின் மஞ்ச தண்ணிக்கு இதுவரை மயங்கவில்லை என்கிறார்கள். விக்ரமா கொக்கா.

Time in Colombo
0 comments:
Post a Comment