வெள்ளி, 3 ஜனவரி 2014,10:50pm
விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா நடித்திருக்கும் பண்ணையாரும் பத்மினியும் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்திருக்கிறார்கள். பிப்ரவரி 7 படம் வெளியாகிறது.
விஜய் சேதுபதி நடித்த இரு படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளன. அதில் ஒன்று இந்த பண்ணையாரும் பத்மினியும். இன்னொன்று ரம்மி. சீனியாரிட்டிபடி பண்ணையார்தான் முதலில் வர வேண்டும்.
ஆனால் ரம்மியின் பாடல்களை வெளியிட்டு டிசம்பர் இறுதியில் படம் வெளியாகும் என்று அறிவிப்பும் செய்தனர்.ஜனவரி 10 இரண்டு மெகா படங்கள் வெளியாகி ரம்மியை சட்னியாக்கும் சாத்தியக் கூறுகள் இருந்ததால் ஜனவரி இறுதியில் படம் வெளியாகும் என்றார்கள். ஆனால் கடைசி நேரத்தில் பண்ணையார் முந்தியிருக்கிறார்.
ஜெயபிரகாஷ் பண்ணையாராக நடிக்கும் இந்தப் படத்தில் கௌரவ வேடத்தில் சினேகா தோன்றுகிறார். பிப்ரவரி 7 படம் வெளியாவதால் ரம்மி பம்ம வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியிருக்கிறது.






Time in Colombo
0 comments:
Post a Comment