யாழ் மாவட்டத்தில் உள்ள பறவைகளை ஆய்வு செய்யும் விசேட குழுவினர் எதிர்வரும் 11 ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு வருகைத் தரவுள்ளனர்.
கொழும்பு பல்கலைக்கழக விலங்கியல்துறை களப்
பறவையியல் குழுவினர் பேராசிரியர் சரத் கொடகமவின் வழிகாட்டலுடன் இந்த
வருடம் யாழ்ப்பாணத்தில் குறித்த ஆய்வு நடைபெறவுள்ளது. இந்த ஆய்வு முகாம்
11ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை நடைபெறும்.
யாழ் மாவடத்தின் நெடுந்தீவு உட்பட
பலவிடங்களில் உள்ள பறவைகள் எந்த வலயத்தைச் சார்ந்தவை- இலங்கைக்கு
உரித்தானவையா அல்லது குடிபெயர்ந்த பறவைகளா - அவற்றின் இனம் என்பன தொடர்பாக
ஆய்வுகள் நடைபெறவுள்ளன.
கடந்த மார்கழி மாதம் மன்னார் மாவட்டத்தில்
பறவைகள் ஆய்வு நடைபெற்றது. இலங்கை களப்பறவையியல் குழுவும் சிறுவர்
மகிழ்வகமும்- தொண்டமனாறு வெளிக்கள நிலையமும் இணைந்து பாடசாலை மட்டத்தில்
மாணவர்களுக்கிடையே இயற்கை விஞ்ஞான அறிவை ஊக்குவிக்கும் நோக்குடன் இயற்கை
ஊக்குவித்தல் கழகம் அமைத்து செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





Time in Colombo
0 comments:
Post a Comment